பக்கம்:துன்பச் சுழல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 துன்பச் சுழல்

சென்ருல் இன்னும் ஏதாவது இன்னல் வி ளே யி ன் என்னுமோ என்று பயந்து, அங்கேயே இன்னும் சில நாள் இருப்பதென்று முடிவு செய்து விட்டான். அதற்கேற்ப அழகியின் அன்பும் அவன் எண்ணத்தை உறுதிபடுத்தியது. எப்படியும் அவள் அவனே நல்லபடி காப்பாற்றும் பொறுப் பைத் தான் ஏற்றுக்கொண்டதாக அவனிடம் கூறிள்ை. அவ னு க் கு ஏதாவது இன்னல் வருமேயானல் தன் தலையைக் கொடுத்தாகிலும் காப்பாற்றுவதாக உறுதியளித் தாள். அதற்குள் மற்றவர்களும் அங்குவந்து அவனுக்குப் பலவகையில் தேறுதல் கூறினர். எதற்கும் அஞ்சவேண்டு வதில்லை என்றும், அவனே எங்கும் வெளியில் அனுப்ப மாட்டார்களென்றும், அஞ்சாது அங்கேயே இருக்கலாம் என்றும் கூறினர்கள். எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டானே ஒழிய, தனியன் வாய்திறந்து ஒரு வார்த் தையும் சொல்லவில்லை. அதற்குள் உள்ளே இருந்த மார்த்தாண்டன் மறுபடியும் வெளியே வந்து அவனைப் பல வாறு எச்சரித்துவிட்டு, அவனே எங்கேயும் அனுப்ப வேண்டாமென்று ஆணையிட்டுவிட்டு, மற்றவர்களுக்கும் ஏதேதோ பாடங்கள் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தனியல்ை தனக்குவர் இருந்த ஒரு பெருந்தீங்கு ஒழிந்தது என்ற பெருமூச்சுடன் அவன் வெளி யே போய் விட்டான்.

அன்று முதல் , தனியன் அந்த மாளிகையை விட்டு வெளியில் வருவதே இல்லை. மற்றவர்களெல்லாம் நாள் தோறும் வெளியில் செல்வதும், வேண்டியவற்றைத் திருட்டு வழியில் சம்பாதித்து வருவதும், வாழ்வதுமாக இருப்பதைக் கண்டான். அவனும், அழகியும் மட்டும் வீட்டில் இருந்து கொண்டிருப்பார்கள். அழகி முன்னும் சரி, அப்போதும் சரி அவனைப்பற்றி அறியக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பாவம், அவனுக்குத் தாய் தந்தையர் யார் என்று தெரிந்தால்தானே சொல்ல. எப்படியோ அவன் அண்ணுமலையைச் சேர்ந்த ஓர் அைைத என்று மட்டும் .ெ சா ல் லி வந்தான், அவளும் ஓர் அைைத ஆதலால் தன்னைப்போன்ற அவனைத் தக்க வகையில் பாதுகாத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/69&oldid=580122" இலிருந்து மீள்விக்கப்பட்டது