பக்கம்:துன்பச் சுழல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 69

வந்தாள். அவள் சொல்லுக்கு மாறு சொல்லமாட்டான் முருகன். எனவே மார்த்தாண்டன் வந்துபோகும் அந்த வேளைகளில் தவிர, மற்ற நேரங்களில் தனியன் தன் விருப்பப் படியேதான் வாழ்ந்து வ்ந்தான். அவன் வாழ்வைக் கண்ட இரண்டொரு பிள்ளைகளும்கூடப் ப்ொருமை கொண்டனர். அவர்களெல்லாம் ஒடி ஆடி உயிரைப் பிடித்துக்கொண்டு சம்பாதித்துவர, அவன் மட்டும் முதலாளிகளுடன் உல் லாசமாக வாழ்வது கண்டு அவர்கள் பொருமைப்படுவது முறைதானே.

தனியன் வெளியே செல்ல வில்லையே த வி ர வீட்டிலேயே திருட்டுத் தொழிலை யெல்லாம் பயின்று கொண்டிருந்தான். மார்த்தாண்டன் அவனைக் கடிந்தாலும் கூட, அவனிடம் ஒருதனி எண்ணம் வைத்திருந்தான், எவனுக்கு நன்கு பாடம் கற்றுக் கொடுத்துப் பயிற்றி விட்டால் மற்றவர்களைக் காட்டிலும் அவனே அதிகமாகக் கொண்டுவருவான். என்ற எண்ணம் எப்படியோ அவனுக்கு உண்டாகிவிட்டது. எனவே அவனுக்கு அதிகமாக அந்தக் கலையைக் கற்பித்து வந்த்ான். ஆம், நம் காட்டில் உள்ள கலைகளில் திருடுவதும் ஒரு கலேயாக ஆகி விட்டது. களவும் கற்றுமற' என்ற சொல் ஊரறிந்த சொல்லாகி விட்டது. அதற்கு வெவ்வேறு பொருள் சொல்ல முயன்ருலும். 'திருடு வதையும் கற்றுக்கொள். பிறகு வேண்டுமானல் மறந்துவிடு’ என்ற பொருள் எல்லோர் உள்ளத்திலும் நன்கு பதிந்து விட்டது. அது மட்டுமின்றி நாட்டு நிலை பும் களவுக் கலையை வளர்க்கும் நெறியில் தானே அமைந்து விட்டது. அதைக் கற்றுக் கொடுக்க ஒரு பள்ளிக்கூடம், ஆசிரியர் எல்லாம் தேவையா என்று தானே கேட்கத் தோன்றுகிறது. ஆம், அந்தக் கலே சொல்லாமல் வளருவது; கேளாமல் பயிலுவது. என்ருலும் திறமையும் சிறப்பும் பெற வேண்டுமானல் பள்ளிக்கூடம், தேவைதான். இன்று நாட்டில் நல்ல வேளை யாக அத்தகைய பள்ளிக்கூடங்கள் கிடையா!

'இன்று உலகத்திலே களவு எத்தனையோ வகையில் நடைபெறுவதைக் கர்ண்கின்ருேம். சிலர் பட்டப்பகலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/70&oldid=580123" இலிருந்து மீள்விக்கப்பட்டது