பக்கம்:துன்பச் சுழல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 துன்பச் சுழல்

யாவர் கண்களும் திறந்திருக்கும்போதே கொள்ளே அடிக் கின்றனர். ஆனல் அவர்களுக்குக் கொள்ளைக்காரர் என்ற பெயர் கிடையாது; வியாபாரி என்று பெயர். கொள்வது உம்மிகை கொள்ளாது, கொடுப்பது உம் குறைபடாது. தமிழர் அன்று மேற்கொண்ட வாணிபம் இன்று ஏட்டிலே இருக்கிறதே ஒழிய காட்டிலே இல்லை. இந்தச் சண்டை ஏன் நின்றது என்ற அளவுக்குக்கூடச் சில கொள்ளைக்காரர்கள் பேசிக் கொள்ளுகின்றனர். கொரியா போர் உலகப் போராக மாருதா என்று எண்ணுகின்றவரும் காட்டில் உள்ளனர். சண்டையின் காரணமாகக் கொள்ளையடித்தவர் காட்டில் எத்தனே பேர் கொள்ளை அடித்தவற்றையும் கள்ளக் கணக்கில் காட்டாது மறைத்து, அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியையும் சேர்த்து மூடியவர் எத்தனே பேர்? இவர்களெல்லாம் காட்டில் பெரிய மனிதர்களாக உலவு பவர்கள் தாம், இவர்களுக்குத் திருடர் என்ற பெயர் கிடையாது. ச - * .

மலேயா, இரங்கூன் முதலிய நாடுகளில் கடக்கும் வேடிக் கையான கொள்ளையை இன்று அறிகின் ருேம் காம். ஒரு கூட்டமாக வருவது, செல்வரைத் தூக்கிச் செல்வது, மறைத்து வைப்பது, பெரும் பொருள் கேட்பது, அவர் உறவினர் மூலம் பொருளைப் பெறுவது, பிறகு கொண்டு வந்து விடுவது, இதுபோன்ற கொள்ளை அவ்விடங்களில் மிகச் சாதாரணச் செயலாகி விட்டது. ஆம், அவர்களுக்கும் கள்ளர், திருடர் என்ற பெயர்களில்லை. அவர்கள் அரசியல் காரணமாகப் போராடும் பொதுநல வாதிகள்.

கம் காட்டிலுங்கூட, ஏன் நம் மாகாணத்திலுங் கூடக் கூட்டங் கூட்டமாகக் கிராமங்களுக்கு இரவில் மட்டு மல்லாது, பகலிலும் சென்று துப்பாக்கியைக் காட்டிப் பய முறுத்திப் பொ 3ளப் பெற்றுச் செல்லும் நிகழ்ச்சி அன்ருட நிகழ்ச்சியாகிவிட்டது. அதைத்தடுக்க அரசியலார் என்ன முயற்சி செய்தும், அத்தொழில் மேன்மேல் வளர்ந்து கொண்டே போகின்றதன்றி குறைவதாகக் காணுேம் ஆம், அவர்களும் திருடரல்லர். காட்டின் கலம் விரும்பும் போது மக்களின் நண்பர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/71&oldid=580124" இலிருந்து மீள்விக்கப்பட்டது