உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 75

லேயே தங்கியிருந்தனர். அந்த அம்மையாரது நெருங்கிய உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து அவர்களை விசாரித்து விட்டுச் செல்வது வழக்கம். அந்தப் பெருமாளிகையைத்தான் மார்த்தாண்டனும் வீரப்பனும் குறிபார்த்தார்கள். வீட்டில் பெரும்பாலும் பெண்கள்தானே படுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு.

முதலில் பிரம்பூர் சென்று அந்த மாளிகையைப் பற்றிய துணுக்கங்களையெல்லாம் அறிந்துகொண்டு வந்துவிட்டான் வீரப்பன். ஒரு தோட்ட வேலைக்காரனேப்போலச் சென்று தோட்ட வேலை கிடைக்குமா என்று கேட்டறிந்து உள்ளே சென்று தங்கிப் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண் டிருந்து வந்தான். புறக்கடை வாயிலுக்குச் செல்வதற்கு உள்ளிருந்து ஒரு நீண்ட தாழ்வாரம் சென்றதையும், அந்தத் தாழ்வாரத்தின் கோடியில் அழகாகச் சிமிட்டியால் செய்யப் பட்ட ஒரு வளைவு இருந்ததையும், அந்த வளைவுக்குள் சிறியவர் புகுந்து செல்ல முடியும் என்பதையும் நன்கு கண்டுகொண்டான். எனவே நல்ல நடு இரவில், யாராவது சிறுவருடன் சென்று, அவனே உள்ளே அனுப்பிப் பின் கதவைத் திறக்கச்செய்து, பிறகு தாங்களும் உள்ளே புகலாம் எனறு திட்டமிட்டுக் கொண்டே வீரப்பன் வழி கண்டுவிட்டதையும் தன்னுடன் இன்னொருவரும் ஒரு சிறு பையனும் வரவேண்டுமென்றும் கேட்டான். மார்த் தாண்டன் என்றும் இதற்கெல்லாம் வெளியே கிளம்ப மாட்டான். தப்பித் தவறி எங்கேயாவது அகப்பட்டு விட்டால் தன் பெருமை என்னுவது என்ற எண்ணத்தில் அத்தொழிலில் தான் நேரடியாகக் கலந்து கொள்வதில்லை. அதுமட்டுமன்றி அந்தத் திருட்டுப் பள்ளிக்கூடத்தையே தன் வீட்டுக்கு நெடுந்தொலைவில் வைத்ததற்கும் காரணம் அதுதான். ஆகவே தான் எக் காரணத்தாலும் வீரப்ப லுடன் வரமுடியாது என்று சொல்லிவிட்டான். தன் மகன் முருகனை உடன் அனுப்புவதாகச் சொன்னன். சிறு பையன் வேண்டுமே என்று இருவரும் நெடுநேரம் ஆழ்ந்து சிந்தித்தார்கள். சிந்தனையின் முடிவிலே தனியன் வந்து சேர்ந்தான். மார்த்தாண்டன் தன்னிடம் பதினேந்து வயது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/76&oldid=580129" இலிருந்து மீள்விக்கப்பட்டது