பக்கம்:துன்பச் சுழல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 துன்பச் சுழல்

என்று இருவரும் திட்டமிட்டார்கள். அதன்படி மார்த் தர்ண்டன் ஒரு ரிவால்வர் தனக்கென வாங்கியும் வைத்துக் கொண்டான். அவர்கள் திட்டம் நாள்தோறும் வளர்ந்து கொண்டே வந்தது. முடிவில் ஒருநாள் இரவு பிரம்பூரில் உள்ள ஒரு பெருமாளிகையில் திருட வேண்டுமெனத் திட்ட மிட்டார்கள்.

பிரம்பூர் சென்னையைச் சேர்ந்து இருந்தாலும் அவ்வூர் சென்னேயுடன் புதிதாகச் சேர்ந்த ஒரு பகுதி. நகராண்மைக் கழகத்தார் புதுப் பகுதியில் ஒன்றும் திருத்தமும் வளர்ச்சி யும் செய்யாவிட்டாலும், பிற பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு வரிகள் வாங்குவது போன்று அங்கும் வாங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். அவர் தம் வருவாயைப் பெருக்கு வதற்கு இப்படிப் பிற பகுதிகளைச் சேர்ப்பதை ஒரு வழி என்று கொண்டார்கள் போலும். குடிர்ே இல்லையானலும் எங்கும் நீர் தேங்கிலுைம், சாலை அமையாவிடிலும், கட்டும் காவலும் அற்றபோதிலும் அவர்களுக்குக் கவலை ஏது? அங்கே கட்டும் காவலும் அவ்வளவு அதிகமாக இல்லை. கட்டும் காவலும் இருந்தாலுமே கலங்காத வீரப்பனுக்கு ஒன்றுமில்லாத அந்த இடத்தில் திருடுவது ஒரு பெரிதாகத் தெரியவில்லை. அங்கே ஒரு பெருஞ் செல்வர் குமரவேல் என்பவர் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் அவருக்கு ஒரே மகள் இருந்தாள் அவர் மனேவியும் மகளும்தாம் அவருடைய முழுச் செல்வத்துக்கும் உரியவர்கள். அவர்கள் அங்கேயே பிரம்பூரில் தங்கள் மாளிகையில் தங்கி வாழ்ந்து வந்தார்கள் குமரவேலர் இருக் கும்போதே வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தனர். அவர் இறந்த பிறகும்கூட ஆட்களுக்குக் குறைவில்லை. பக்கத் து.ாரில் உள்ள நிலங்களைப் பார்த்துக்கொள்வதற்கும், சென்னையிலுள்ள வீடுகளுக்கு வாடகை வாங்குவதற்கும் பிறவற்றிற்குமாகப் பல பணியாளர்கள் இருந்தார்கள். கமலாம்பாள் என் ற அந்த அம்மையாரும் தன் மகள் மணி மேகலையுடன் தங்கள் மாளிகையிலேயே வசித்து வந்தார்கள். மணிமேகலைக்கு வயது பத்துதான் இருக்கும். சமையற்காரன் தோட்டக்காரன் ஆகியோர் எப்போதும் அம்மாளிகையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/75&oldid=580128" இலிருந்து மீள்விக்கப்பட்டது