பக்கம்:துன்பச் சுழல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 73

பெறவேண்டும், எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்த வேண்டும். ஆண்டுதோறும் பல வீடுகள் கட்டிலுைம் தனக்கிருக்க வீடில்லாத் த்ச்சரும், கொல்லரும் நம் காட்டில் இல்லாது ஒழியவேண்டும். ஆண்டு முழுதும் வயலில் வேலே செய்தாலும் அரைவயிற்றுக்கும் கஞ்சியில்லாது, முதலாளி

யின் களஞ்சியம் நிறையும் கொடுமை ஒழியவேண்டும். அந்த

கிலேக்கு அரசாங்கமும் பொருளாதார அறிஞர்களும் முயன்று வழிவகுத்து, சட்டத்தாலும் திட்டத்தாலும் பாடுபட வேண்டும். இன்றேல் இன்றைய சிறு திருடர்கள் காளைக்

கொள்ளைக் கூட்டத்தாரெனத் திடீர்த் தோற்றத்தாராகி, வீடு வீடாக, ஊர் ஊராகக் கொள்ளை அடிப்பது, கொலே செய்வது, எப்படி என்று எண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

ஆம், இத்தகைய எண்ணங்களுடன் மார்த்தாண்டன் தன்

திருட்டுத் தொழிலக் கொள்கள்த் தொழிலாகப் பெருக்கத்

திட்டமிட்டுக் கொண்டிருந்தான். -

மார்த்தாண்டனுடைய செலவு வரவுக்குமேல் சென்று கொண்டிருந்தது. இந்தப் பிள்ளைகள் கொண்டுவரும் அந்தக் குறைந்த ஊதியம் அவனது ஆடம்பர வாழ்வுக்குப் போதியதாக அமையவில்லை. மற்றும் அவன் மகன் முருகன் வேறு தன் குடும்பச் செலவைப் பெருக்கிக் கொண்டே போனன். ஆகவே மார்த்தாண்டன் தன் தொழிலைப் பெருக்கத் திட்டமிட்டான். இரவு வேளைகளில் பெரிய பங்களாக்களில் புகுந்து கொள்ளையடிக்க வழிகள் என் னென்ன உண்டோ அத்தனையும் ஆராய்ந்தான். அதற்குத் துணையாயிருப்பதற்காக வீரப்பன் என்பவனேயும் சேர்த்துக் கொண்டான். வீரப்பன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்த வன். இளைஞயிைனும் பல முறை சிறை சென்றவனும்கூட. அவன் துணையால் எப்படியும் பெரும் பொருள் குவிக்க லாம் என்ற எண்ணம் மார்த்தாண்டனுக்கு வந்துவிட்டது என்ருலும் அவனுக்கு ஒற்றியூர்த் தென்னஞ்சோலே மாளி கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லே. தேவையானபோது அவனேத் தங்கசாலைக்கு வரவழைத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். மேலே நடத்தப்போகும் கொள்ளைக்குக் கொலையும் கூடவே இருக்கவேண்டிய ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/74&oldid=580127" இலிருந்து மீள்விக்கப்பட்டது