பக்கம்:துன்பச் சுழல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 துன்பச் சுழல்

ருடம் உண்ணுவிரதம் இருக்கும் அந்த ஏழைக்கு-என்ன உரிமை நாளேக்குப் பத்து மணி நேரம் மாடாக உழைத் தாலும், வயிற்றுக்கெட்டாக் கூலிகொண்டு மனேவி மக்களே வைத்துக்கொண்டு ஏங்குகிருனே-அந்த ஏழைக்கு ஏது உரிமை அவன் தவறி நடந்தால் திருடன் என்று சிறை யிடைத் தள்ளப்படுகிருன். ஏன் இந்தக் கொடுமை? பொரு ளாதார வேறுபாடன்ருே காரணம். காட்டில் பொருளா தார நிபுணர்கள் ஆயிரக் கணக்கில் தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு ஊர்தோறும் பவனிவருகிருர்கள். சிந்தித்தார்களா அவர்கள் இந்த ஏழைகள் நிலையை சிந்திக்க வேண்டா மென்று அரசாங்கம் ஏதாவது ஆணையிட்டதா? இல்லே பின் என்ன வகையில் அவர்கள் பொருளாதாரத்தை அளக் கிருர்கள். வெளிகாட்டான் ஒருவன் மாலையிலோ இரவிலோ துறைமுகத்துக் கெதிரிலும், கொத்தவால் சாவடிக்குப் பக்கத்திலும், மூர்மார்க்கெட்டைச் சுற்றிலும், சட்டக் கல்லூரிக்குப் பின்னும் சுற்றிப் பார்ப்பானே ஆயின் இந்தப் பொருளாதார நிபுணர்கள் பல ஆயிரம் அடிக்குக் கீழ் தள் ளப்பட வேண்டியவர்கள் என்று தானே கூறுவான். இதற்கென அவர்களுக்குச் செலவு செய்யும் பணத்தை இந்த ஏழைகளுக்குக் குடில் அமைப்பதில் செலவிட் டால் எவ்வளவோ நாட்டின் பொருளாதாரம் முன்னேறி யிருக்குமே.

பொருளாதாரம் ஏட்டில் எழுதப் படுவதன்று; மேடை யில் பேசப்படுவதன்று; ஊர் சுற்றி உல்லாசப் பவனிவருவ தன்று. பொருளாதாரம் காட்டில் விளைவது. செல்வர் வறியர் என்ற தீமை அறுப்பது. வாழ்கிற மக்களின் வாட்டம் தீர்ப்பது. எத்தனை பேர் உண்டோ அத்தனை பேருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் அளிப்பது. இவற்றை யெல்லாம் இன்றைய பொருளாதார நிபுணர்கள் எண்ணிப் பார்க்க ஏது நேரம்?

'உண்மையில் நாட்டில் திருடர்களும் கொள்ளேக் கூட் டத்தாரும் உடனடியாக ஒழியவேண்டும்ானல் பொருளாதார கிலே சீர்திருந்த வேண்டும். உழைப்பவன் அதன் பயனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/73&oldid=580126" இலிருந்து மீள்விக்கப்பட்டது