பக்கம்:துன்பச் சுழல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 77

போகும் வழியில் முருகனும் வீரப்பனும் அவன் என் னென்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக்கொண்டே சென்ருர்கள். வீரப்பனேக் கண்டதும் ஏனே தனியன் நடுங்கின்ை. அவன் தோற்றமே தனியனே அச்சுறுத்தியது. இருட்டில் இருட்டறையில் எதிர்த்து வருபவர்களே விரட்டி ஒட்டத்தக்க அத்துணை பயங்கர உருவம் வீரப்பனுடையது. அஞ்சிய தனியனே முருகன் தேற்றினன். வீரப்பனும் பல இனிய ஆசைவார்த்தைகள் சொல்லிக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே போனன். வழியில் எப்படியோ ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொண்டு எங்கோ ஒரு மூலையில் இறங்கினர்கள். மணி பதினென்று அடித்தது கேட்டது. தனியனும் முருகனும் கையில் பாட்டரி விளக்குகள் வைத் திருந்தார்கள். வீரப்பன் கையில் துப்பாக்கி யிருந்தது. அதை ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்து வைத்திருந் தான். தனியன் எப்படி அந்தக் குறுகலான சாளரத்தின் வழியாகச் சந்தடி செய்யாமல் குதிக்கவேண்டு மென்ப, தையும், நேரே குறுகிய தாழ்வாரத்தின் வழியாகச் சென்று. பின்புறக் கதவைத் திறக்கவேண்டு மென்பதையும், திறந்த பின் அவர்களும் உள்ளே வந்து விடப்போவதால் அஞ்ச வேண்டுவதில்லை என்பதையும் விளக்கிக்கொண்டே சென் ருர்கள். தனியனே தன் வாழ்காளின் கடைசி நாள் அது. தானே என்று எண்ணிக்கொண்டே பயந்து பயந்து சென் ருன் எப்படி ஏறுவது, இறங்குவது, சந்தடி செய்யாமல் கடப்பது, தாழ்ப்பாளேக் கண்டு திறப்பது, புது இடத்தில் ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது என்பன போன்ற பல எண்ணங்கள் அவன் உள்ளத்தில் சுழன்று வட்டமிட் டன. தனது துன்பச் சுழல் அவனே உள்ளே ஆழ்த்துவ, தாக உணர்ந்தான். வாழ்நாளிலே கண்டறியாத, செய்தறி யாத ஒருசதிச் செயலேத் தான் செய்யப் போவதை எண்ணு. திருக்க அவல்ை முடியவில்லே. கன்ருகத் தன்னை அறிந்த நிக்லயில் இன்று அவன் இருக்கிருன். ஆதலினல் அத் தொழிலுக்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. என்ரு. லும் காப்பாற்றினவர் கட்டளை அதுவானல் அவன் என்ன் செய்வான் மூ வ ரு ம் மாளிகைத் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/78&oldid=580131" இலிருந்து மீள்விக்கப்பட்டது