பக்கம்:துன்பச் சுழல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 . துன்பச் சுழல்

மணி பன்னிரண்டும் ஆகிவிட்டது; ஒன்றை எட்டிப் பார்க்கும் நேரம். வீரப்பன் தனியனைத் தூக்கி மெள்ள அந்தச் சாரளத்தில் விட்டான். சாளரம் மிகச் சிறியதாத லால் மிகவும் வருத்தத்தோடுதான் தனியன் உள்புகுந்தான். அப்போதும் அவனே வீரப்பன் எச்சரித்துக் கொண்டுதான் இருந்தான். அந்தச் சாளரத்திலிருந்து நேரே பின் கதவு தெரிந்தது. அப்படியே சென்று கதவைத் திறக்க வேண்டு மென்றும், அன்றி வேறு வழியாகத் திரும்பிச் சந்தடி செய்து யாரையாவது எழுப்பினல் அப்படியே சுட்டுவிடுவ தாகவும் பயமுறுத்தி அனுப்பின்ை. கையில் பாட்டரியுடன் தனியன் தெரியாத வீட்டுப் பின் புறத்தில் குதித்து அடிமேல் அடி எடுத்து வைத்தான். கடை மெதுவாக இருந்ததே ஒழிய அவன் எண்ணம் விரைவாக ஒடிற்று. ஏன் அப்படியே திரும்பிச் சென்று உறங்குபவர்களே எழுப்பலாகாது என்று எண்ணினன்; அல்லது அங்கிருந்தே கூச்சல் போட்டால் அனேவரும் எழுந்துவிடமாட்டார்களா என்ற எண்ணமும் வந்தது. ஆனல் எல்லாவற்றிற்கு மேலாகச் சோறிட்டவன் கட்டளையை மீருதே என்று மனச்சான்று சொல்லிற்று.

தனியன் குதித்த சிறு ஒசையிலேயே பின்புறக் காவல் காரன் சற்று விழித்துக் கொண்டான். ஏதோ பூனையாக இருக்கும் என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டான். சற்று நேரத்துக்குள் பாட்டரி வெளிச்சம் தெரியவே அவன் சந்தேகப்பட்டுத் திரும்பிப்பார்த்தான். தனியன் அடிமேல் அடிவைத்துச் செல்வது தெரிந்தது. உடனே அலறி எழுந்து தன் பாட்டரி விளக்கைப் போட்டுக்கொண்டு அவன் பின்ன லேயே சென்ருன். அதை வெளியிலேயே யிருந்து கண்ட வீரப்பன் ஆத்திரத்தோடு அவனைக் குறிபார்த்துச் சுட்டான். சாளரவழியாகக் குண்டு உள்ளே பாய்ந்தது. ஆனல் அந்த வேலைக்காரன் தப்பிவிட்டான். தனியன் காலில் குண்டு பாய்ந்து விட்டது. ஆ என்று அலறி வீழ்ந்தான். துப்பாக்கிச் சத்தமும் பையன் அலறலும் சேர்ந்து மாளிகையி லுள்ள அனைவரையும் எழுப்பிவிட்டன. வீரப்பனும் முருக னும் தாம் தப்பில்ை போதுமென்று அப்படியே ஒடிச்சென்று விட்டார்கள். வீட்டு மின்சார விளக்குகளெல்லாம் ஏற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/79&oldid=580132" இலிருந்து மீள்விக்கப்பட்டது