உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 79

பட்டன. அனைவரும் பின்பக்கம் ஓடிவந்தார்கள். மனைத் தலைவியாரும் வந்தனர். சிறுவன் தனியன் காலில் பட்ட குண்டோடு மயக்கமாக வீழ்ந்து கிடந்தான். அம் மனத் தலைவி கமலம்பாள் அந்த இளம் முகத்தைக் கண்டு அவனே மாளிகை உள்ளே பத்திரமாகத் தூக்கிக் கொண்டுவந்து கட்டிலின்மேல் கிடத்துமாறு செய்தாள். திருடர்களைத் தேடி மாளிகைத் தோட்டத்தின் காற்புறமும் ஆட்கள் துருவி னர். அவர்கள் இருந்தால்தானே அகப்பட.

தனியனைக் கொண்டு வந்து படுக்கையில்போட்டுத் தன்னலியன்ற முதல் உதவி வகையில் கட்டுகள் கட்டி இரத்தம் வராமல் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தார் இல்லத்தலேவியார். திருடரது துணிகரச் செயலை நோக்கி ஒருபுறம் வருத்தம் அதிகரித்தது. உடனே போலீசுக்குத் தகவல் சொல்லி அனுப்பலாமா என்று எண்ணினள். ஆனல் மறுபடியும் போலீஸ் வந்தால் யார் இருக்கிருர்கள் பிடித்துச் செல்ல. பாவம், இந்தச் சின்னஞ் சிறு பையன்தானே இருக் கிருன் என்று எண்னுவாள். தனியனுடைய குழந்தைத் தன்மை, மருத இளமை முகம், கமலாம்பாள் உள்ளத்தைப் பிணித்தது. இவள் மகள் மணிமேகலை எழுந்துவந்து தனியன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அழத் தொடங்கி விட்டாள். வேலைக்காரர்களெல்லாம் உடனே போலீசைக் கொண்டு வரவேண்டும் என்று கூச்சலிட்டார்கள். தனியன் சற்று மயக்கம் தெளிந்தவனய்த் தண்ணிர் வேண்டுமென்று கையைக் காட்டினன். தண்ணிரைக் கொண்டுவந்து தன் கையாலேயே சிறுகச் சிறுகக் கொடுத்தாள் கமலாம்பாள். அவள் உள்ளம் அந்தச் சிறு பையனேத் திருடனென்று எண்ணுமல் நல்லவகைக் கொண்டது. போலீசை அழைத்து வர இருந்த வேலைக்காரர்களே கிறுத்தி உடனே ஒரு கை தேர்ந்த மருத்துவரை அழைத்துவருமாறு ஆணையிட்டாள் மனத் தலைவியார். அம்மையின் சொல்லுக்கு மறு சொல் பேசாத பணியாளர் உடனே ஒருவனே அனுப்பி மருத்து வரை அழைத்து வரச் செய்தனர். கமலாம்பாளும், மணிமேகலையும் தனியன் படுக்கையின் இருபுறத்திலும் உட்கார்ந்துகொண்டு அவனேயே நோக்கிக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/80&oldid=580133" இலிருந்து மீள்விக்கப்பட்டது