உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை 61

செய்வதாகவும் கூறிச் சென்ருர். ஏதோ சில மருந்து வகை களும், கட்டுக்கு மேல் போடவும், தேவையானல் உள்ளுக்குக் கொடுக்கவும் கொடுத்தார். கமலாம்பாள் சிந்தனை யெதுவு மின்றி உள்சென்று, ஒரு நூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார். மருத்துவர் மகிழ்ச்சியோடு, எப்படியும் ஒரு சில நாட்களில் அவனே நடக்கவைத்துப் பழையபடியாக்கும் பொறுப்பு தன்னுடையதென்று சொல்லி மறுகாட்காலை எட்டு மணிக்குள்ளாகவே வருவதாகப் புறப்பட்டார்.

விடியற்காலே ஆகிவிட்டது. வேலையாட்கள் சிலர் உறங்கினர். மணிமேகலையும் உறங்கச் சென்று விட்டாள். கமலாம்பாள் மட்டும் தனியன் பக்கத்தில் கட்டிலிலேயே இருந்தாள். அவன் நன்கு உறங்கியதாகத் தெரியவே அப்படியே கட்டிலின் பக்கத்தில் சாய்ந்தாள். அயர்ச்சியால் நன்கு உறங்கி விட்டாள்.

மறுநாள் கமலாம்பாள் கண்விழித்துப் பார்க்கையில் கன்கு விடிந்திருந்தது. தனியன் அதுவரையில் உறங்கித் தான் இருந்தான். மணிமேகலையும் மற்ருெரு புறத்தில் படுத்திருந்தாள். கமலாம்பாள் விரைந்து தன் காலைக்கடன் களே முடித்துக்கொண்டு அவனுக்கு ரொட்டி, பால், பழம் முதலியன எடுத்துவரச் சொல்லி அவன் பக்கம் சென்ருள். மேகலையும் எழுந்து தன் காலை வேலைகளைச் செய்யச் சென் ருள். சிறிது நேரத்துக்கெல்லாம் தனியன் கண்விழித்துப் பார்த்தான். எழுந்து உட்கார முயன்ருன். வேலைக்காரன் உதவியுடன் எழுந்தும் உட்கார்ந்தான். பிறகு அப்படியே கடன்களை முடித்துப் பல் துலக்கிச் சிறிது ரொட்டியும் பாலும் சாப்பிட்டான். எதிரிலே இருக்கின்ற கமலாம்பாளேப் பார்த்து ஓவென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான். அவன் அழுவதைக் கண்ட மேகலையும் அழத் தொடங்கிள்ை. அம்மையார் தனியனைத் தேற்றி அவன் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டியதில்லை எனவும், விரைவில் காயமாறிக் குணமடை வான் என்றும், பிறகு அவன் எங்கும் செல்ல வேண்டிய தில்லி யெனவும் கூறி மகிழ்வித்தாள். அவன். ஏதோ சொல்ல றாயெடுத்தான். என்ருலும் அழுகைதான் பீறிட்டு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/82&oldid=580135" இலிருந்து மீள்விக்கப்பட்டது