பக்கம்:துன்பச் சுழல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 துன்பச் சுழல்

வந்தது. ஆகவே அவள் அவனே ஒன்றும் பேச வேண்டா

மென்று சொல்லிப் படுக்க வைத்தாள். அதற்குள் மருத்துவர் வந்து எப்படி இருக்கிறது எனக் கண்டறிந்தார். கட்டினை

அவிழ்த்துக் காயத்தை நன்கு ஆராய்ந்தார். உள்ளே குண்டு கள் செல்லவில்லை என்றும், ஒரமே உராய்ந்து சென்ற தென்றும் கூறித் தக்க மருந்துவைத்துக் கட்டிப் பதினேந்து காளில் முழுதும் குணமாகிவிடும் என்றும், வளரும் உடம்புக்கு ஒரு குறைவுமில்லை யென்றும், வேளா வேளைக்கு

தக்க பால், பழம், ரொட்டி, இரசச் சோறு முதலியவைற்றுள்

தேவையானதைத் தருதல் கலமென்றும், தான் நாள்தோறும் இரண்டு வேளையும் வந்து போவதாகவும் சொல்லிவிட்டுச்

சென்ருர். அதற்குள் அம்மையார் மாம்பலத்தில் உள்ள தன்

தம்பியை அழைத்து வருமாறு ஏவின ஆள் வந்து அவர் ஊரில் இல்லை என்றும், வர ஒரு வாரம் ஆகுமென்றும் சொன்னன். தனியன் மறுபடியும் படுத்துக்கொண்டான். மற்றவர்களுடைய வேலே முறைப்படி அன்றும் நடந்து கொண்டிருந்தது. திருடவந்த விடத்திலா தனக்கு இத்தனைச் சிறப்பு என்று எண்ணிக்கொண்டே கண்னே முடின்ை தனியன். எத்தனேயோ எண்ண அலைகள் அவன் உள்ளத்தில் எழும்பித் தவழ்ந்தன. தாயின் பரிவு காணுத அவனுக்கு

அன்று தாயன்பு இன்னதெனத் தெரிந்தது. அந்த அம்மை யார் யாரோ? தன் வீட்டுக்குத் திருட வந்தவனே இப்படி மகனெனப் போற்றிச் சீராட்டுகிருர்களே என்று எண்ணி ன்ை. பணியாளர்களுக்கு அந்த அம்மையாரின் சீரிய நலப் பண்புகள் தெரியுமாதலால் அவள் வாய் மொழிப்படியே கடந்து வந்தனர். மேகலையும் அடிக்கடி தனியனிடம் வந்து

வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பாள். நாள்தோறும் மருத்துவரும் வந்து சென்று கொண்டிருந்தார். ஒரு

வாரத்துக்குள் புண் எவ்வளவோ ஆறிவிட்டது. அவளுகக் கொம்பு ஊன்றி நடக்கும் நிலை பெற்ருன். நாள் ஏற ஏற

அவன் நலமுற்று வருவதைக் கண்ட கமலாம்பாளும் மேகலையும் மகிழ்ச்சியுற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/83&oldid=580136" இலிருந்து மீள்விக்கப்பட்டது