பக்கம்:துன்பச் சுழல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII

கொல்லவும் கருதினர்

பிரம்பூர் நிகழ்ச்சிக்குப் பிறகு மார்த்தாண்டன் விரப் பனேத் தன் வீட்டுக்கு அடிக்கடி வரவிடுவதில்லை. அவன் பெருங் கள்வதைலால், அடிக்கடி தன் வீட்டுக்கு வந்தால் யாராவது ஐயப்படுவார்கள் என்று எண்ணினன். மற்றும் தென்னஞ்சோலை மாளிகையைப் பற்றியும் அவனிடம் சொல்லிவிட்டான். அதுமுதல் ஒருவரை ஒருவர் காண வேண்டுமானல் தென்னஞ்சோலை மாளிகைக்கே செல்ல வேண்டும். மேலும் பிரம்பூருக்கு வீரப்பன் முருகனுடன் சென்றதால் அவன் இருப்பிடம் முதலியவற்றைக் கேட்டறிந் தான். அவனுக்குச் சொல்லக்கூடாத நிலையிலிருந்தும் வேறு வழியின்றி முருகன் சோலை மாளிகையைப் பற்றிச் சொல்லி விட்டான். எனவே அதுமுதல் அவர்கள் அனைவரும் அங்கே வந்து காணும் வழக்கம் கிலேத்துவிட்டது. -

தனியன் மறுபடியும் விடுபட்டு அயலவர் கையில் அகப் பட்டதைக் குறித்து முருகனே நன்கு கண்டித்தான் மார்த் தாண்டன். அவன் தன்னைக் கண்டிக்கா விட்டாலும் அந்தச் குடு தனக்கும் உரியதுதானே என்று எண்ணிய வீரப்பளுல் வருந்தாதிருக்க முடியவில்லை. பாவம் சிறிய பையன் அவர்க ளிடையில் அகப்பட்டு என்ன ஆனனே என்று ஏங்கினர் அனைவரும் அழகி முருகனே அடிக்கடி அந்தப் பையனைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தாள். முருகனும் நடந்த வற்றைச் சொல்லிவிட்டான். துப்பாக்கிச் சத்தம் கேட்ட தும் தனியன் அலறியதை அறிவார்களே ஒழிய, அந்தக் குண்டு உண்மையில் யார்மேல் பட்டது என்று அறியவில் ஆல அவர்கள். நேராக வெளியே ஒடிவர வழிகண்டுகொண்டு வெளியே வந்துவிட்டார்கள். ஆகவே குண்டு யார்மேல் பட்டது. தனியன் ஏன் அலறின்ை என்பனவற்றை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/84&oldid=580137" இலிருந்து மீள்விக்கப்பட்டது