உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 துன்பச் சுழல்

களால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. குண்டு தனியன்

மேல்தான் பட்டிருக்க வேண்டும்; ஆகவேதான் அவன்

அலறியிருப்பான் என்ற எண்ணமும் அவர்களுக்குத் தோன்

ருமற்:போகவில்லை. அனேத்தினுக்கு மேலாக, அவனே அந்த வீட்டுக்காரர்கள் என்னென்ன கொடுமைப் படுத்துகிருர் களோ என்று எண்ணும்போது அவர்களது கல்நெஞ்சமும்

வருந்தத்தான் செய்தது. அழகி அடிக்கடி அழுது கொண்

டிருந்தாள். அவன் காலில்தான் குண்டு பட்டிருக்கும் என்பதைக் கேட்டதிலிருந்து அவளுக்கு மனம் ஒரு நிலையி

லில்லை. அவனைச் சென்ருவது பார்த்து வரலாமா என்று எண்ணமிட்டாள். முருகனிடமிருந்து அந்த வீட்டு முகவரி, யைப் பெற்றுக் கொண்டாள். என்ருலும், அங்குச் சென்

ருல் அவனே எங்கு வைத்திருக்கிருர்கள் என்று அறிந்தால் தானே காணமுடியும் என்ற எண்ணமும் உண்டாயிற்று.

ஒருவேளை கள்ளன் என்ற குற்றத்திற்காகச் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டானே, அன்றிக் குண்டின் புண் ஆறு வதற்காக மருந்தகத்தில் சேர்க்கப்பட்டானே என்று எண்ணி

ள்ை. எப்படியும் முருகனே அனுப்பி அவன் எங்கு இருக் கிருன், அவன்ங்லே எப்படி இருக்கிறது ஆகியவற்றை அறிந்துவரச் செய்தாள். மார்த்தாண்டனும் வீரப்பனும் கூடத் தனியன் நிலையை அறிய விரும்பினர். எனவே, முரு கன் இரண்டுகாள் கழித்து மாற்று வேடத்தே பிரம்பூர்ப் பக்கம் சென்ருன். அந்த மாளிகையின் அருகிலும் உலவி ன்ை. அங்குள்ளவர்களிடம் ஏதேதோ பேசுவதுபோல் பேசினன். முடிவில் தனியனே அவர்கள் தங்கள் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றுகிருர்கள் என்றும், மருத்துவர் வந்து அடிக்கடி பார்த்துச் செல்கிருர் என்றும், அவன் கள்வகை அல்லாது வீட்டுமகனைப் போலவே கமலாம்பாளால் காப் பாற்றப்படுகிருன் என்றும் அறிந்து கொண்டான். தான் அறிந்தவற்றை அப்படியே அழகிக்கும், மார்த்தாணட்னுக் கும் சொன்னன்; அழகி அந்த அளவிலாவது நலமுறுகிருனே என்பதை அறிந்தபோதிலும் அவளால் ஆற்றியிருக்க முடியவில்லை. தான் அன்று திருவல்லிக்கேணியில் கண்டு பிடித்திராவிட்டால் இந்தக்கொடுமை யெல்லாம் அந்தப் பையனுக்கு வந்திருக்காதே என்று எண்ணும்போது அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/85&oldid=580138" இலிருந்து மீள்விக்கப்பட்டது