உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவும் கருதினர் 85

ளுக்குக் கண்ணிரும் வந்துவிட்டது. அவனே எப்படியாவது காண வேண்டு மென்று துடித்தாள். பிரம்பூர் செல்ல அவளுக்கு வழியும் தெரியும். என்ருலும் அங்கு சென்ருல் அவன் ஒருவேளை தானும் கள்வர் கூட்டத்து ஒருத்தி என்பதைக்காட்டிக் கொடுத்துவிட்டால் என்னவது என்று எண்ணினுள். முடிவாக முருகன் மூலம் இரண்டு நாளுக் கொருமுறை அவ ன் நிலையை அறிந்துவர ஏற்பாடு செய்தாள்.

மார்த்தாண்டனும், வீரப்பனும் மேலும் சதி செய்யத் தொடங்கினர். அந்தப் பையன் நிலையை முருகன் மூலம் கன்கறிந்து கொண்டனர். தனியன் அங்கு வீட்டில் வாழ் வாரில் ஒருவகை இருந்து வருவதைக்காண அவர்கள் உள்ளம் கரிய ஆரம்பித்தது. அவன் தற்போது எல்லாவற்றையும் அறிந்திருக்கின்ற காரணத்தால் தங்கள் திருட்டுத்தனத்தை யெல்லாம் எங்கே வெளிக் கொணர்ந்துவிடுவானே என்று அஞ்சினர் அவர்கள். அவன் பொதுவாகத் தடியை ஊன்றிக் கொண்டு எழுந்து நடக்கிருன் என்பதையும் அறிந்துகொண் டார்கள். இன்னும் முழுதும் நலம் பெற்ருல், பிறகு எங்கா வது சென்று தங்கள் மறைவிடத்தையும், இரகசியங்களையும் சொல்லிவிடுவானே என எண்ணினர். அவனே மறுபடியும் எப்படியாவது அந்தச் சோலை மாளிகைக்கே கொண்டுவர வேண்டுமெனத் திட்ட மிட்டனர். ஆனல் மறுபடியும் வேறு எண்ணமுண்டாயிற்று. அவனேக் கொண்டு வருவதாலும் பயனில்லை என்று கண்டார்கள். அவன் எப்படியும் இனிமேல் அங்குத் தங்கமாட்டான் என்று திரும்ப எண்ணினர்கள். வந்து மேலும் உண்மைகளைத் தெரிந்துகொண்டு மறுபடியும் வெளியே ஓடிவிடுவான் என உணர்ந்தார்கள். ஆகவேதான் உண்மை வெளியாகாதிருக்க வேறு வழி உண்டா என ஆராயத் தொடங்கினர். அவர்களுக்கா வழி அகப்படாது? இருவர் மனமும் பிறகு ஒரே முடிவுக்கு வந்தது. ஆம், அதுதான் தனியனுக்கே முடிவு தேடுவது. .

ஒருநாள் மார்த்தாண்டனும் வீரப்பனும் தனிமையில் சோலை மாளிகையினுள் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/86&oldid=580139" இலிருந்து மீள்விக்கப்பட்டது