பக்கம்:துன்பச் சுழல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 துன்பச் சுழல்

கொண்டிருந்தனர். தனியனைக் கொண்டு வருவதா அன்றிக் கொன்று விடுவதா என்பதே அவர்கள் பேச்சாக இருந்தது. அவனேக் கொண்டுவந்தாலும் அங்கே தங்கமாட்டான் என்று எண்ணினர்கள் அவர்கள் அது மட்டுமின்றி, அங்கு மறு படியும் வருவாயிைன்-இன்னும் உள்ள இரகசியங்களை யெல் வாம் அறிந்து வெளியிடவும் கூடும் என்று எண்ணினர். ஆகவே எப்படி பாவது அவனேக் கொன்று விடுவதென்றே முடிவு செய்தார்கள் மார்த்தாண்டன் அங்கு வராவிட்டால் என்ன, அங்கேயே எப்படியாவது இருந்து போகிருன் என விட்டுவிடலாமே என்ருன். என்ருலும், என்றைக்காவது ஒரு நாளைக்கு அவன் தங்கள் திருட்டையெல்லாம் வெளிப் டடுத்தக் கூடும் என்று வீரப்பன் சுட்டிக் காட்டியபோது அவனே அடியோடு தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லே என்பதை மார்த்தாண்டன் உணர்ந்தான். அ வ்வாறு தொலைப்பதற்கு அவனே எப்படி, எங்குக் கொண்டுவந்து கொலே செய்வது என்று எண்ணமிட்டார்கள். அவன் இன் னும் நன்கு குணமடையவில்லையாதலால் மாளிகையைவிட்டு வெளியே வரமாட்டான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். மாளிகையினுள் சென்று அவனைத் துரக்கிக்கொண்டு வருவ தென்பதோ இயலாததொன்று என்பதும் அவர்கள் அறிக் ததுதான். எனவே அவன் நிறைந்த நலமுற்று, வெளியே எங்காவது கடைத்தெருப் பக்கமோ, வேறு வகையாகவோ வரும்போது கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தனர். -

இருவர் செய்த கொடிய வஞ்சனையைச் சுவற்றின் மறுபக்கத்தே இருந்தே அழகி நன்ருகக் கேட்டுவிட்டாள். மேலே இருந்த பலகணி அவள் கேட்பதற்கு நன்கு உதவி செய்தது. முருகனும் அப்போது ஊரில் இல்லை. மற்றப் பிள்ளைகளும் வெளியே சென்றிருந்தார்கள். ஓவென்று கூச்சலிடலாமா என்று எண்ணிள்ை. ஆனல் பயன் என்ன ஆகுமோ என்று வாளா இருந்துவிட்டாள். ஆலுைம் அவள் மனம் கேட்கவில்லை. 'அந்தோ, காணுத அவனேக் கண்டு பிடித்தவள் நானல்லவா? இன்று அவனேக் கொல்லச் சதி செய்கிருர்களே? இதற்கு என்ன செய்வது? எப்படியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/87&oldid=580140" இலிருந்து மீள்விக்கப்பட்டது