உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவும் கருதினர் 87.

ஒடிச் சென்று அவனுக்கும் அந்த வீட்டாருக்கும் மற்றவர் களுக்கும் இதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று தனக் குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அவள் பலப்பல. நினைத்தவண்ணம் தென்னஞ் சோலைகளுக்குள் புகுந்தாள். மார்த்தாண்டனும், வீரப்பனும் தங்கள் பேச்சை முடித்த, தும் வெளியே வந்தார்கள். யாரையும் காணுததால் அழகி யைக் கூப்பிட்டார்கள். அவள் தூரத்திலிருந்து ஓடி வங் தாள். அவள் முகத்தில் கலவரக் குறிப்புத் தென்பட்டது. வீரப்பன் ஒருவேளை தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை, அவள் கேட்டிருப்பாளோ என எண்ணினன். அவள் எங்கோ தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் அவ்ன் வாறு இருக்காது என்றும் கினைத்தான். மார்த்தாண்டனே, முருகன் இல்லாத காரணத்தினல் அழகியின் முகம் வாடி யிருக்கிறது என்று எண்ணினன். முருகன் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாள் ஆகுமென்றும். வீட்டைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவேண்டு மென்றும் சொல்லிவிட்டு மார்த்தாண்டன் வீரப்பனுடன் சென்றுவிட்டான்.

அவர்கள் சென்ற உடனே, அழகிக்கு கிலே கொள்ள வில்லை எப்படியாவது தனியன் உயிரை மீட்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கொலைக்குத் தானே காரணமாக அமையவேண்டியிருக்கும் என்று எண்ணிள்ை. உடனே பிரம்பூர் ஓடிச் சென்று அவர்கள் மாளிகையைக் கண்டு இது பற்றிச் சொல்லி வரலாமா என நினைத்தாள். முருகனிடம் அந்த மாளிகை பற்றிய முழுவிவரத்தையும் கன்கு அறிந். திருந்தாள். அத்துடன் வீட்டில் யாரும் இல்லாதது அவ. ளுக்கு நன்மையாயிற்று. உடனே ஏதோ சர்ப்பிட்டுவிட்டுப் பிரம்பூருக்குப் புறப்பட்டாள். ஒடினள். எப்படியோ அந்த மாளிகையைக் கண்டு பிடித்தாள். உள்ளே நுழைந்தாள். மாளிகையின் முன் வாசலின் பக்கத்தில் உள்ள அறையில் த னி ய ன் படுத்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு. வேலைக்காரன் ஏதோ செய்துகொண்டிருந்தான். தனியன் கண்ணே மூடிக்கொண்டிருந்தான். அவன் அருகில் சென் ருள் அழகி. வேலைக்காரன் அவளை யார் என்று விசாரித்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/88&oldid=580141" இலிருந்து மீள்விக்கப்பட்டது