பக்கம்:துன்பச் சுழல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 துன்பச் சுழல்

தான். அதற்குள் உள்ளிருந்த கமலாம்பாள் வெளியே வங் தார்கள். அவர்கள் அழகியைப்பற்றி விசாரித்தார்கள். அவள் தன்னேப் பற்றிக் கூறுவதற்குள் தனியன் கண்ணேத் திறந்தான். அவனைக் கண்டதும் ஓவென்று அலறிவிட்டாள் அழகி. கண்ணிர் பெருக்கெடுத்து ஓடிவந்தது. அதைக் கண்ட தனியனும் அழுதான். கமலாம்பாள் ஒன்றும் தெரி யாது விழித்துக்கொண்டு அழகியை யார் என்று மறுபடியும் மறுபடியும் கேட்டாள். இரு வரும் உட்கார்ந்தார்கள். அழகி தன் வரலாற்றைச் சொன்னள். தான் ஒரு அைைத யானதையும், கள்வர் கைப்பட்டு கற்பிழந்து முருகனுடன் கூடி வாழ்வதையும், அந்தக் க்ள்வர்கள் என்னென்ன வகை யில் கொடுமை இழைக்கிருர்கள் என்பதையும். அப்போது முடிவாகத் த னி ய ன் உயிருக்கே அவர்கள் உலே வைக்க எண்ணியிருப்பதையும் கூறினள். தன்னுல்தான் அவன் மறுமுறை பிடிபட நேர்ந்தது என்பதைச் சொல்லும் போது அவள் அழுகை அதிகமாயிற்று. மறுபடியும் அடக்கிக்கொண்டு அனறு அங்குக் கள்ளர் செய்த சதியினே அழுகையோடு கலந்தே சொல்லி முடித்தாள். தனியன் கல முற்றதும் எக்காரணத்தாலும் அவனே வெளியே அனுப்பக் கூடாது என்று மன்ருடினுள். ஒரு திருடர் கூட்டத்தோடு சேர்ந்திருக்கும் ஒரு பெண் இவ்வளவு பரிவாகப் பேசக் காரணம் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் கமலாம் பாளுக்கு உண்டாயிற்று. ஒருவேளை இதுவும் ஒரு ஏமாற்ற மாக இருக்குமோ என எண்ணினுள். தனியன் அவளே அன்போடு நோக்கியதையும், இரண்டொரு முறை அக்கா என்று அழைத்ததையும் கண்டு ஒருவேளை இருவரும் உடன் பிறந்தவர்களோ என்று ஐயமுற்ருள். ஒருவேளை தனியன் முழுக்க நலம்பெற்ருல் மறுபடியும் அந்தத் திருட்டுத் தொழி லுக்குத்தான் சென்று விடுவானே என எண்ணினுள். அவனே மறுபடி அழைத்துச் செல்வதற்காகவேதான் அழகி இப்படி வந்து பாசாங்கு செய்கிருளோ என்றும் கருதிவிட்டாள். எனவே அழகியை இரண்டு மூன்று தடவை அவள் சொல் வது உண்மைதான என்று கேட்டுவிட்டாள். அழகிக்கு அந்த அம்மையார் தன் தன்மேல் ஐயமுறுகிருர்கள் என்பது கன்கு விளங்கிவிட்டது. அவள் உடனே எழுந்து அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/89&oldid=580142" இலிருந்து மீள்விக்கப்பட்டது