பக்கம்:துன்பச் சுழல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவும் கருதினர் 83

அம்மையாரின் காலப் பிடித்துக்கொண்டு, 'அம்மா, ங்ான் கள்வர் கூட்டத்தில் இருந்தாலும் தூய்மை உடையவள். ஏதோ அைைதயாக இருந்ததோடு, அழகாகவும் இருந்ததால் அவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, வாழ்வுக்கு வழி ஏற்படாதா என்று எண்ணி அவர்களோடு சேர்ந்தேன். ஆனல் சேரும்போது அவர்கள் செய்யும் தொழில் இது என்று தெரிந்திருந்தால் நான் சேர்ந்தே இருக்கமாட்டேன். காள் ஏற ஏறத்தான் அவர்கள் கொடுந்தொழில் தெரிந்தது. என்னே ஏற்றுக்கொண்ட என் கணவர் சற்று நல்லவர்தான். அவர் இதுபோன்ற பெரும் கொள்ளேக்கும் கொலேக்கும் சென்றது கிடையாது. பாவி வீர்ப்பன் என்ற ஒருவன் வந்து சேர்ந்ததிலிருந்துதான் எங்களுக்கு இததகைய தொல்லை யெல்லாம் வந்தது. இந்தத் துணிகரக் கொள்ளேக் கும் கொலைக்கும்கூட அவனே காரணம். அம்மா ! இன்று இவனேக்கொல்லத் துரண்டியவனும் அவனே. முருகனின் தந்தையார் மார்த்தாண்டனும் அவன் இசைவுக்கு இணங்கி னர். இவனே - தனியனே - இரண்டாம் முறையாக நான் அழைத்து வரவில்லையானல் இந்தக் கொடுமைகளெல்லாம் ஏற்பட்டிருக்காதே. எனவே இவன் தப்பித் தவறிக் கொல் லப்பட்டால் நான்தானே முதல் காரணமாவேன். அது குறித்தே மிக வருந்துகிறேன். அதனலேயே அவன் உயி ரைக் காப்பதே என் முதற் கடமை என்று ஓடிவந்தேன். இதில் கான் என் உயிரை இழந்தாலும் கவலை கொள்ளப் போவதில்லை. அம்மா! எப்படியாவது தனியன் உயிரைக் காப்பாற்றுங்கள். எனக்கு நேரமாகிறது. நான் விரைந்து செல்லவேண்டும். அவ்வப்போது அங்கு நடப்பதை யெல் லாம் கண்டுவந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன். மற்றும் அவர்கள் இரகசியங்களை யெல்லாம் அடுத்தமுறை உங்களுக் குச் சொல்லுகிறேன். அவர்களேயெல்லாம் தக்கவரைக் கொண்டு சிறையிட வழி காணுங்கள்; என்று தன் உள்ளத் தைத் திறந்து காட்டினுள். அனேத்தையும் கேட்ட கமலாம் பாள் உண்மையிலேயே அவள்மேல் இரக்கங்கொண்டாள். அவளுக்குச் சிற்றுண்டி அளித்தாள். சிற்றுண்டி கொண்ட அழகி ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு பத்து மணிக்கு மேல் அவர்களே வண்ணுரப்பேட்டையில் ரயில்பாதை கடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/90&oldid=580143" இலிருந்து மீள்விக்கப்பட்டது