உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 துன்பச் சுழல்

கும் கேட்'டின் பக்கத்தில் வந்து சந்திக்கும்படியும், அவ்வப் போது நடப்பதைத் தான் கண்டுவந்து உரைப்பதாகவும், வேறு ஏதாவது அவசரமாக இருந்தால் தானே கேரில் ஓடி வருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்ருள். செல்லு முன் பாகத் தனியனுக்குத் திருட்டி கழித்து, அவன் வாழ்வானுக என்று வாழ்த்தியே சென்ருள்.

தனியனேப் பற்றிய தகவல்களையெல்லாம் அழகியின் மூலம் அறிந்த கமலாம்பாள் சற்று ஆறுதலடைந்தாள். அவன் கள்வர் கூட்டத்தில் ஒருவகை இல்லாமல், பெருங் கொள்ளைக்காரணுக இல்லாமல், நல்ல பையன் எனக் கேள் விப்பட்டால் மகிழ்ச்சி உண்டாகத்தானே செய்யும் ! அவள் மனதில் முதலில் உண்டான எண்ணமும் அதுதானே. எப் படியோ அவள் உள்ளத்தில் அவன் நல்லவன் என்று பட்டது உறுதியாயிற்று என்பதை எண்ண உளமகிழ்ந்தாள் என்ரு லும், அவனுக்குக் காத்திருக்கின்ற அந்தப் பேரிடியை பற்றி எண்ணும்போது அவளால் கலங்கா திருக்க முடிய வில்லை. எப்படியாவது அந்தக் கொடுமையிலிருந்து அவனை மீட்டு, நல்லபடியே அவனே முன்னுக்குக் கோண்டுவரவேண் டும் என விழைந்தாள்.

என்ன செய்வது என்று எண்ணி ஒரு முடிவிற்கு வங் தாள். தன் உடன் பிறந்தவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருந்தாள். முன்னமே சொல்லியனுப்பியபோது அவர் ஊரிலில்லை என்று அறிந்தவளாதலால். இப்போது மறுபடி யும் சொல்லி அனுப்பினுள் மறுநாள் மாலே வருவதாகவும் வெளியூரிலிருந்து அப்போதுதான் திரும்பி வந்ததாகவும் தகவல் வந்தது. தனியன் பக்கத்திலேயே இருந்துகொண்டு மேல் கடக்க வேண்டுவதைப் பற்றிச் சிந்தை செய்யலாள்ை எப்படியாவது தனியனைக் காப்பாற்றி நல்ல வழியில் அவளே வாழவைக்கவேண்டும் என்பதே அவளது அவா.

மறுநாள் மாலே ஆறு மணிக்கெல்லாம் ஒருவருடைய கார் வந்து நின்றது. உள்ளே கமலாம்பாளின் சகோதரர் வந்தார். வெளிக் கூடத்திலேயே உட்கார்ந்து பலவற்றைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/91&oldid=580144" இலிருந்து மீள்விக்கப்பட்டது