உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவும் கருதின. .91

பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். செல்வி மணி மேகலைக்குத் தான் கொண்டுவந்த விளையாட்டுப் பொருள் களையும், தின்பண்டங்களையும் கொடுத்தார் வந்தவர். அவ ளும் . அதைப் பெற்றுக்கொண்டு விளையாடச் சென்றுவிட் டாள். பாவம், அவளுக்குத் தெரியாது தனியனுக்கு வங் திருக்கும் திங்கு தெரிந்தால் உட்கார்ந்து அழுதுவிடுவாள். அவளுக்கு ஏனே அவனிடம் அவ்வளவு பற்று. .

உடன் பிறந்தவர்கள் இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்து அறையில் படுத்திருந்த தனிய னுக்கு அக்குரல் ஏதோ அறிமுகமானதுபோல் காணப் பட்டது. என்ருலும் யார் என்று நன்கு அவனல் புரிந்து கொள்ள முடியவில்லே. ஒருவேளே செல்வநாதராக இருந்து விட்டால் என்ன செய்வது என்று சிங்தை கொந்தான். அவர் வந்து தன்ன்ேப்பார்த்துவிட்டால், என்னென்ன சொல்வாரோ என்று நினைத்தான். ஒருவேளை இந்த வீட்டிலிருந்து விரட்டி விட்டாலும் விடுவார் என்று எண்ணினன். எனினும் அவரது அன்பின் அருங்குணம் அவன்முன் தோன்றியது. எல்லாவற்றையும் பொறுத்துப் பார்க்கலாம் என்று அமைதி யாக இருந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் பேச்சு கேட்கவில்லை. இருவரும் எழுந்து உள்ளே வருவதை உணர்ந்தான். அப்படியே கட்டி லில் சாய்ந்தபடி கண்ணே மூடி ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த கமலாம்பாள் தன் தம்பிக்குத் தனியனைக் காட்டினள். தம்பியாக வந்தவர் வேறு யாருமில்லே. தனியன் எண்ணியது போன்று செல்வநாதரே தான். அவர் உள்ளே வந்தார். சிறிதுநேரம் அப்படியே அசைவற்று நின்றுவிட் டார். அவர் முகத்தில் மாற்றம் உண்டாயிற்று. அதை யெல்லாம் கண்ட கமலாம்பாள் ஒன்றும் தெரியாது திகைத் தாள். இவனைப்பற்றி ஒருவேளை தன் தம்பிக்கு முன்னமே தெரியுமோ என்று எண்ணிள்ை. 'ஏன், என்ன அப்படிப். பார்க்கிருய்?’ என்ருள். செல்வநாதர் ஒன்றுமில்லை. இந்தப் பையனை எங்கோ பார்த்த நினைவிருக்கிறது என்று கூறினர். உடனே தனியன் விழித்தெழுந்தவன் போல் காட்டி, அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/92&oldid=580145" இலிருந்து மீள்விக்கப்பட்டது