பக்கம்:துன்பச் சுழல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவும் கருதினர் 93.

செல்வநாதர் சென்றபிறகு கமலாம்பாள் தனியனிடம் வந்து உட்கார்ந்தாள். தனியன் மறுபடியும் அழத் தொடங்: கின்ை அவரிடம் தான் நடந்துகொண்ட விதத்தைப்பற்றி எடுத்து விளக்கி உரைத்தான். தான் அவற்றையெல்லாம் அறிந்ததாகவும், செல்வநாதரும் அறிவதாகவும், அவன்மேல் தவறில்லை என்பதை அவர் உணர்ந்து விட்டதாகவும். ஆகவே அதுபற்றி வருந்தத் தேவையில்லே என்றும் கமலாம். பாள் உரைக்கவே அவன் சற்று ஆறுதலடைந்தான். அவன் இருந்த நிலையில் அவனே அப்போது ஒன்றும் கேட்க வேண்டாமென்று கருதிய அம்மையார் அவனே உறங்குமாறு: விட்டுச் சென்ருர். அவனுக்கும் என்னென்ன வகையில் மக்கள் தனக்கு அறிமுகமாகின்ருர்கள் என்பதை எண்ண. வியப்பாக இருந்தது. மற்ருெருபுறம் தன் துன்பச் சுழல் இன்னும் தொடர இருக்கிறதோ என்று எண்ணும்போது கவன்ருன். திருடர்கள் சதிச்செயல் நல்ல வேளையாக அவ: னுக்குத் தெரியாது. அப்படியே உறங்கிவிட்டான். அன் றைப்பொழுது அகன்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/94&oldid=580147" இலிருந்து மீள்விக்கப்பட்டது