பக்கம்:துன்பச் சுழல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

விடி வெள்ளி

செல்வநாதர் அன்று தம் வீட்டிற்குச் சென்று, அமைதியாக அந்த காளைச் செலவிட்டார். இரவு நெடுநேரம் வரையில் சிந்தையில் ஆழ்ந்தார். தான் அப்படி அந்தச் சிறு வனிடம் அனுதாபம் காட்ட என்ன இருக்கிறது என்று எண்ணினர். அவர் கெஞ்சம் சற்று வருந்தியது. அப் படியே இல்லற நெறியினின்று மாறி, என்றும் தான் தனிமையில் வாழ்ந்து வருவதைப்பற்றி கினைத்தார். தனக் குப் பின் வழி வழியாக வரும் குடிப்பிறப்பு இல்லையே என நைந்தார். பதினேந்து ஆண்டுகளுக்குமுன் தாம்கொண்ட காதற் செல்வியை மனேவியாக்கிக்கொள்ளா மடமையை நினைத்துப் பார்த்தார். அவளே அப்போதாவது சென்று தேடலாமா என்று பார்த்தால் அதுவும் கூடவில்லை. அவள் இருக்குமிடமே தெரியவில்லை. அவள் யாரையாவது மணந்துகொண்டாளா, இருக்கிருளா அல்லது இறந்து விட் டாளா என்பனபோன்ற விளுக்கள் பல ஆண்டுகளாக அவர் உள்ளத்தெழுந்திருந்தன. தான் அனதைவிடுதி அமைப்ப தற்குக் காரணமான அவள் கினேவை எண்ணத் தொடங் கினர். பழமையும் புதுமையும் மாறிமாறி அவர் மனக்கண் முன் வந்து கின்றன. உறக்கம் கொள்ளவில்லை. மேல் தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றிச் சிந்தித் தார். தனது அமைதியான வாழ்வில் தனியன் வந்து ஏன் குறுக்கிட வேண்டும் என எண்ணினர். இனி அவனுக்காக கள்வர்களிடம் சண்டையிட வேண்டும் என்று எண்ணும் போது, ஏன் அதுபற்றி நாம் கவலை கொள்ளவேண்டும் என் பதைக் கருதிப் பார்த்தார். மற்ருெரு புறம் ஐயோ பாவம் யாருமற்ற அவ்விளைஞன் காப்பாற்றப்படத்தான் வேண்டும், என்ற கருத்து எழுந்தது. மேலும் காட்டில் இதுபோன்ற கள்ளர் கூட்டங்களைக் கருவறுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் அவர். பிறரை மடக்கிக் கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/95&oldid=580148" இலிருந்து மீள்விக்கப்பட்டது