உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி வெள்ளி. 95

செய்து, பொருள் பெருக்கிவாழும் மக்களினம் நாட்டில் உள்ளவரையில் அங்காடு எப்படி நாகரிக நாடாக விளங்கும் என்பது அவர் எண்ணம். நாகரிகம் என்பது வெறும் மாட மாளிகைகளிலும், மின்சார விளக்கொளியிலும், வேடிக்கை வினே தங்களிலும், வானில் பறப்பதிலும், கார்வழிப் பவனி யிலும், வேளைக்கொரு உடை உடுப்பதிலும், மணமற்ற மலர் கள் குடுவதிலும், இயற்கை அழகைச் செயற்கைச் சேற்ருல் மறைப்பதிலும், இவைபோன்ற பிறவற்றிலும் இருப்பது என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. நாகரிகம் வாழ் வின் அடிப்படையில் அமைவது என்பதே அவர் எண்ணம். அதாவது நல் ஒழுக்கமே நாகரிகத்தின் திறவுகோல் என எண்ணி அந்த முறையில் ஒழுக்க நெறியைத் தாம் வாழ்விடை ஒம்பிவருபவர் அவர். ஊராருக்கு உபதேசம் செய்துவிட்டு, தாம்மட்டும் மனம்போன போக்கில் திரியும் மேடைப் பேச் சாளி அல்லர் அவர். நான் சொல்வதுபோல் செய், செய் வதுபோல் செய்யாதே' என்று மக்களுக்கு உபதேசம் செய் யும் தாழ்ந்த மனப்பான்மை அவரிடம் இல்லே. பிறர் எப்படி கடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்ருரோ, அதே நெறியிலே அவரது தனிப்பட்ட வாழ்வும் அமைந்து செல் லும். நாடெங்கும் வாழக்கேடொன்றும்மில்லை என்ற தமிழ் மொழியை வாழ்விடைக் கொண்டுவரவேண்டு மென்பதே அவரது சலியா முயற்சி. செல்வரும் வறியரும் கலந்து நின்று தமக்குள் இருக்கும் வேறுபாட்டை நீக்கி, அவனவன் பாட்டுக் கேற்ற பயனே அளித்து கூட்டு வாழ்விலே காட்டைக் காண வேண்டுமென்பதே அவருடைய ஆசை. பிறர் குற்றம் பொறுத்து, தன் குற்றத்துக்கு நாணி, மற்றவர்களுக்கு மறந்தும் திங்கிழைக்காத மாபெரும் நெறியே அவரது வாழ் வுப் பாதை. அந்தப் பாதையில் அமைதியோடு செல்லும் அவரது வாழ்வில் இந்தக் கள்வர் கொடுமையை நீக்கவேண்டி யது பெருமுள்ளாகி விட்டது. தன்காலில் தைக்காவிட்டா லும் மற்றவர்களை வருத்தும் அதன் கொடுமையைக் கண்டு கொண்டு அவரால் வறிதே இருக்க முடியவில்லை. எனக்கு வந்தால்தானே; மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எனக் கென்ன என்று எண்ணி வாழும் பெரிய மனிதக் கூட்டத்தில் அவர் என்றும் சேர்ந்ததில்லை. யாராயினும் அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/96&oldid=580149" இலிருந்து மீள்விக்கப்பட்டது