உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வான் புகழ் வள்ளுவர்

ஆம்; தமிழரசுக் கழகத்தின் நடை முறைச் சரித்திரப் புத்தகத்திலே மற்றுமொரு வெற்றி ஏடு நம் கண் முன்னர் விரிந்திருக்கிறது. ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்னும் சிறப்புப் பெற்ற தமிழ் மறையை இயற்றியருளிக் காலத்தை வென்ற தெய்வத் திருவள்ளுவரின் இவ் வெற்றியே நமது வெற்றியுமாகும்.

தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்பு மிகுந்த வாழ்வுக்கும், சீர்கொண்ட வளத்துக்கும் ஏற்றம் தரும் வகையில், அன்றிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கழகம். நேர்மைமிக்க தமிழ் உள்ளங்களிலே தன்னேரில்லாத் தனித் தலைவராகக் கொலு வீற்றிருப்பவர் சிலம்புச் செல்வர் அவர்கள். தமது அயராத் தொண்டின் மூலமாகவும், சலியாத உழைப்பின் வாயிலாகவும் தமிழகத்திற்கு அவர்கள் செய்துள்ள நன்மைகள் பலவுண்டு. அந் நன்மைகளிலே மற்றுமொரு தலைசிறந்த வெற்றி-போற்றுதலுக்குகந்த ஒரு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி பதினைந்தாம் நாளில் நடந்தது. அது சாமானியமான நிகழ்ச்சியல்ல; மத்திய அரசாங்க முத்திரை பெற்றதாகும். தபால் தலைகளிலே, வான் புகழ் வள்ளுவரின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்டிருக்கின்ற இன்ப நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறோம்.

வடதிசைக் கவிஞர்களின் உருவப் படங்களைத் தபால் தலைகளில் அரசினர் அமைத்த போழ்திருந்து, நம் தமிழ் மண்ணைச் சார்ந்த புலமை சான்ற கவிஞர் திலகங்களின் உருவங்களையும் தபால் தலைகளில்