பக்கம்:தெப்போ-76.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தெப்போ - 76 விட்டனர். பிரஸ் ரிப்போர்ட்டர்களையும் முக்கிய பிரமுகர் களேயும் யோஷினரி, ரமேஷ், இகிடா மூவரும் வரவேற்று. உபசரித்துக் கொண்டிருந்தார்கள். குறித்த நேரத்தில் சக்கரவர்த்தியும் அவரது குடும்பத். தினரும் வந்து அவர்களுக்காகப் போடப்பட்டிருந்த, ‘வெல்வெட் ஆசனத்தில் அமர்ந்தனர். விநாயகர், நடராஜர் விக்ரகங்களின் அழகைக் கண்ட மகாராணி 'பியூட்டிபுல் ஐடல்ஸ் 1’’ என்று வியந்தார்.

  • பூஜை ஆரம்பிக்கலாமா?’ என்று சக்கரவர்த்தியின் முன் விநயத்தோடு குனிந்து கேட்டான் பஞ்சு சக்கர வர்த்தி தலையசைத்தார்.

அம்மாஞ்சி மந்திரங்களேச் சொல்வி பூஜை செய்யத் தொடங்கினர். அடுத்தாற்போல் திருவாரூரிலிருந்து வந்: திருந்த ஒதுவார் தமிழ்ப்பாடல் ஒன்றைக் கணிரென்ற. குரலில் இனிமையாகப் பாடி முடித்தார். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்திருந்த பிள்ளை யாரைப் பார்த்துவிட்டு, 'அது என்ன?’ என்று கேட்டார். சக்கரவர்த்தி. -

பிள்ளையார்?’ என்ருன் பஞ்சு.

அப்படியானல் விநாயகர் என்பது யார்??? என்று: கேட்டார் சக்கரவர்த்தி. விநாயகர், பிள்ளையார், விக்னேசுவரர், கணபதி எல்லாப் பெயர்களும் ஒன்றேதான்' என்ருன் பஞ்சு. * அடுத்தாற் போல் கணபதி ஸ்தபதியை சக்கரவர்த். திக்கு அறிமுகப்படுத்தினர் கோபால் ராவ்.

  • கணபதி ஸேம் நேம்!’ என்ருர் சக்கரவர்த்தி சிரித்துக்கொண்டே.

由°纷 முடிவுற்றதும், சாம்பசிவ சாஸ்திரிகள் பிள்ளே யாருக்கு சூறைக்காய் உடைத்தார். சூறைக்காய் உடைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/105&oldid=924605" இலிருந்து மீள்விக்கப்பட்டது