பக்கம்:தெப்போ-76.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 105 பதன் தத்துவத்தை சக்கரவர்த்திக்கு விளக்கினர் கோபால் ராவ். கடைசியாக ரோஜா மாலைகளே எடுத்து சக்கரவர்த்தி, மகாராணி, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் எல்லோருக் கும் அணிவித்தான் பஞ்சு. தேரோட்டத்தன்று சக்கரவர்த் திக்கு யானைகள் மாலே போடப் போகும் காட்சியை மனக் கண்ணுல் பார்த்து மகிழ்ந்தார் கோபால் ராவ். கடைசி கடைசியாக எல்லோருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொழுக்கட்டை ரொம்ப ருசியாயிருக்கிறது. வெரி ஸ்வீட். பூர்ணத்தை இதற்குள்ளே எப்படி வைத் தீர் கள்?’ என்று வியப் போடு கேட்ட னர் சில நிருபர்கள். சமையல் வைத்தா நிருபர்களே சமையல்கட்டுக்கு அழைத்துச் சென்று கொழுக்கட்டை செய்யும் விதத்தைக் காட்டினர். 'இதற்கே இப்படி ஆச்சரியப்படுகிருர்களே, இவர் கள் ! காராபூந்தியைப் பார்த்தால், அத்தனே சின்ன காரா பூந்திக்குள் எப்படி காற்றடைத் தீர்கள்?’ என்று கேட்பார் கள் போலிருக்கிறது!?? என் ருர் அம்மாஞ்சி. கருமருது, இரும்பகம்’ என்ற இரண்டு மரங்களே எடுத் துத் தேர் வேலேயை ஆரம்பித்து வைத்தார் காரைக்குடி ஆசாரி. - கணபதி ஸ்தபதி வள்ளுவர் சிலேக்காக வந்திருந்த பாறைக்கு மஞ்சள் பூசி, கற்பூரம் காட்டி, தேங்காய்' உடைத்துவிட்டு, கல்லுளியை எடுத்துச் சிற்ப வேலையைத் தொடங்கினர். தெ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/106&oldid=924606" இலிருந்து மீள்விக்கப்பட்டது