பக்கம்:தெப்போ-76.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 'இது டோக்கியோவா அல்லது தமிழ்நாடா என்று. அடையாளமே தெரியாமல் மாறிப் போச்சு! எங்கே, எந்த இடத்தில் பார்த்தாலும், நம்மவர்கள்தான் கண்ணில் தென் படுகிருர்கள். இப்பவே இப்படி இருந்தால் பதினெட்டாம். தேதி எப்படி இருக்குமோ?’ என்று வியந்தார் அம்மாஞ்சி. மெட்ராஸ்-க்கும், டோக்கியோவுக்கும் ஒரு வித்தில் யாசம்தான். இங்கே எருமை மாடு, சினிமா போஸ்டர் இதெல்லாம் இல்லே!?? என்ருர் சாம்பசிவம். 'இந்த ஊர் மக்கள் நம் ஊர் மாதிரி நடுரோடில் நடப் பதும் இல்ல்ே. நம் ஊரில் ஹார்ன் அடிச்சாக்கூட ஒதுங்க. மாட்டாங்களே?’ என்ருர் அம்மாஞ்சி. 'எருமைப்பால் காப்பி சாப்பிடுகிறவர்கள் குணம்: வேறு எப்படி இருக்கும்? ரோடிலே நடக்கும் போதும் அந்த குணம்தானே வரும்??? என்ருர் குள்ள சாஸ்திரி.

பஞ்சு லாரையும், கோபால் ராவையும் எங்கே காணுேம் காலேயிலிருந்து?’ என்று கேட்டார் அம்மாஞ்சி.
  • அவங்க ரெண்டு பேரும் தெப்போ ஆபீஸ்-க்குப் போயிருக்காங்க. அங்கே பெரிசா தஞ்சாவூர் பாணியிலே பந்தல் போட்டு, வாழை மரம், தேர்த் தொம்பை எல்லாம் கட்டி வைத்திருக்கிறர்களாம். சாந்தா நாராயணன் பார்ட்டி தெப்போ வாசல் பூராவும் ரங்கோலி கோலம்: போட்டுக் கொண்டிருக்கிறர்களாம். அதை வேடிக்கை பார்க்க ஏராளமான கூட்டமாம்! சக்கரவர்த்தி பிறந்த,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/116&oldid=924617" இலிருந்து மீள்விக்கப்பட்டது