பக்கம்:தெப்போ-76.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தெப்போ- 76 அகர முதல எழுத்தெல்லாம். ஆதி பகவன் முதற்றே உலகு. எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய அ எழுத்தைத் தமக்கு முதலாக உடையன. அது போல் உலகம் ஆதி யாகிய பகவனத் தனக்கு முதலாக உடைத்து. உருவகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருங் தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து. உருளுகின்ற பெரிய தேருக்கு, அச்சில் அமைந்து தாங்கும் சிறு ஆணி போன்ற வினேத் திட்பம் உடையாரும் உலகத்தில் உள்ளனர். ஆதலால், அச்சாணி போன்ற அவர்களின் உருவச் சிறுமையைக் கண்டு இகழாதிருக்கக் கடவர். கடலோடா கால்வல் நெடுங்தேர். கடலோடும் காவாயும் ஓடா கிலத்து நிலத்தில் ஒடும் வலிமை பொருந்திய உருளைகளே உடைய பெரிய தேர்கள் கடலில் ஒடமாட்டா. அக்கடலில் ஒடும் மரக்கலங்களும் நிலத்தில் ஒடமாட்டா. தோன் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ஆராயாமல் ஒருவனைத் தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயங்கொள்ளுதலும், நீங்காத துன்பத் தைக் கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/119&oldid=924620" இலிருந்து மீள்விக்கப்பட்டது