பக்கம்:தெப்போ-76.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 121 'உமக்கு ஏன் இப்படி ஒரு அல்ப ஆசை! தேரிலே உள்ள சிற்பங்களைப் படம் எடுப்பாங்களா? உம்ம தலையைப் படம் எடுப்பாங்களா??? என்று கேட்டார் சாம்பசிவம். விருந்தோம்பும் பண்பில் தமிழ் மக்களையும் மிஞ்சி விடுவார்களோ இந்த ஜப்பானியர்??’ என்று ஐயுறும் அள வுக்கு இந்த டோக்கியோ நகரம் எழுச்சியுற்று நிற் கிறது...?? என்று ஜப்பான் சாஸ்திரி தீந்தமிழில் உணர்ச்சி யோடு கூறினர். 'நல்ல தமிழ்ப் பேச்சு கேட்டு ரொம்ப நாளாயிற்று. தேரோட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசப் போகும் கலேஞர் பேச்சைக் கேட்கப் பல்லாயிரம் மக்கள் ஆவலோடு காத்திருக்காங்க! என்ருர் அம்மாஞ்சி.

  • கின் ஸ்ா மெயின் வீதி முனையில் மேடை அமைத்து ஒலிபெருக்கி ஏற்பாடுகளெல்லாம் செய்திருக்கிருர்களாம். அந்தப் பந்தலுக்கு மு ன் ைல் தா ன் தேரோட்டம் தொடங்கப் போகிறதாம்’ ’ என் ருர் ஜப்பான் சாஸ்திரி.

பேஷ் பேஷ்! கலைஞரின் தமிழ் முழக்கம் தெருவெல் லாம் கேட்கப் போகிறதென்று சொல்லுங்கள்?’ என்று உற்சாகத்தோடு கூறினர் சாம்பசிவம். முதலில் கலைஞரின் தமிழ் முழக்கம். அப்புறம் நாதசுர முழக்கம். அப்புறம் வெடி முழக்கம். டோக்கி யோவே அல்லோலகல்லோலப் படப்போகிறது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - விழாவில் நம்ம ஜப்பான் சாஸ்திரியும் நாலு: வார்த்தை பேசட்டும். அவருக்கும்தான் நன்ருகப் பேச வருகிறதே!’’ என்ருர் அம்மாஞ்சி. தெ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/122&oldid=924624" இலிருந்து மீள்விக்கப்பட்டது