பக்கம்:தெப்போ-76.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தெப்போ - 76 குறளோவியம், வள்ளுவர் கோட்டம் இந்த இரண்டும் போதுமே!’ என்ருர் அம்மாஞ்சி. அது சரி, வி. எஸ். டி. எப்ப வருகிருர் தெரியுமா?’’ என்று கேட்டார் சாம்பசிவம். 'இரண்டு நாள் முன்னதாகவே வந்து விடுகிருர்?? என்ருர் அம்மாஞ்சி. 'அவர் வந்த பிறகுதான் விழா ஏற்பாட்டுக்கு, * ஃபைனல் டச்சஸ்' கொடுக்க முடியும். அவர் ஒருத்தர் தான் தேர் நாலு வீதிகளையும் சுற்றி நிலைக்கு வருகிறவரை கூடவே இருந்து டைரக்ட் பண்ணுவார். என்ருர் சாம்பசிவம். -

  • பாவம்! பஞ்சுவும் கோபால் ராவும் நாலு நாளா நின்ற இடத்திலே நிற்கல்லே, காலில் சக்கரத்தைப் பூட்டிக் கொண்டு சுத்தருங்க. என்ருர் அம்மாஞ்சி.
  • சக்கரம் என்றதும் ஞாபகம் வருகிறது. தேர்ச் சக் கரங்கள் எப்போது வருகிறதாம்??? என்று கேட்டாள் சாம்பசிவம்.
  • அதெல்லாம் நேற்றே வந்துவிட்டன. தேர் வேலை யும் முடிஞ்ச மாதிரிதான். அலங்கார வேலேதான் கொஞ்' சம் பாக்கியிருக்கு. அதுவும் இன்றைக்குள் முடிந்து விடும்!?? என்ருர் குள்ள சாஸ்திரி.
  • நாம் போய் முழுத் தேரையும் பார்க்க வேண் டாமா??? என்று கேட்டார் அம்மாஞ்சி.

அரண்மனை வாசல் பக்கமே நாம் யாரும் இப்போ தலே காட்ட முடியாது. தேரைப் பார்க்க அங்கே ஒரு. பெரிய ஜன சமுத்திரமே அலே மோதிக்கொண்டு நிற். கிறது. அடேயப்பா, எவ்வளவு டெலிவிஷன் காமிரா வந்திருக்கு தெரியுமா?’’ -

  • டெலிவிஷன்லே நம்ம தலே தெரிய வேண்டாமா? நாம் போய்த் தேர் மேலே நிற்கலாமே? என்ருர் அம்மாஞ்சி. s
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/121&oldid=924623" இலிருந்து மீள்விக்கப்பட்டது