பக்கம்:தெப்போ-76.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சாஸ்திரிகளே, அடிச்சுதய்யா உமக்கு ப்ரைஸ்!...?? என்று உற்சாகத்தோடு கூவிக் கொண்டே வந்தார் அம்மாஞ்சி வாத்தியார். எதைச் சொல்றீங்க? ராஜஸ்தான்லே ஒரு டிக்கெட், கர்நாடகாவிலே ஒரு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன். எந்த லாட்டரியிலே அடிச்சுது?’ என்று ஆர்வத்தோடு கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

  • லாட்டரி இல்லேய்யா. அடுத்த வாரம் நாம் இரண்டு பேரும் ஜப்பானுக்குப் போகிருேம். நாளேக்கே டில்லிக்குப் :புறப்படனும் . அங்கிருந்து டோக்கியோ! ரெடியா

இருங்க. 'டில்லிக்கா? அங்கே நமக்கு என்ன வேலே??? ஜப்பான் அம்பாசிடரைப் பார்க்கப் போகிருேம் என்று தக்ளியைத் திருகி நூல் நூற்றபடியே சொன்னர் அம்மாஞ்சி வாத்தியார். - - - யாரிடம் சரடு விடுகிறீர்? ஜப்பான்லே கூட அம்பா சிடர் கார் பண்ருங்களா?’ என்று கேட்டார் சாம்பசிவம்.

  • அம்பாசிடர் என்ருல் கார் இல்லேய்யா, வெளி நாட்டுத் தூதரை இங்கிலீஷ்லே அம்பாசிடர்னு சொல்லு வாங்க. ஜப்பான் நாட்டுத் தூதர் டெல்லியிலே இருக்கார். ‘டகாஷிஸ் ஸூ கி’ என்று பெயர். ரொம்ப நல்லவராம். அவர் நம்மைப் பார்க்க ஆசைப்படுகிருராம். ஜப்பான்லே நம் தமிழ்நாட்டுத் தேர் ஒன்று ஒட்டப் போகிருர்களாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/18&oldid=924669" இலிருந்து மீள்விக்கப்பட்டது