பக்கம்:தெப்போ-76.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 25 டான்! ஆண்டவன் வாமன அவதாரம் எடுத்து உலகத் தையே அளந்த மாதிரி இருக்கு’’ என்ருர் குள்ள சாஸ்திரி. - நீரே வாமனுவதாரம்தானே 1:2 என்று கேலி செய் தார் அம்மாஞ்சி. அரண்மனை கஸ்ட் ஹவுஸில் ஐந்து பேருக்கும் தனித் தனி அறை ஒதுக்கியிருந்தார்கள். - 'ஜப்பான் சக்கரவர்த்தி இந்தத் தேர் ஓட்டத்திலே ரொம்ப ஆர்வமாயிருக்கிருராம்?’ என்ருன் பஞ்சு. அவரை நாம் எப்போது சந்திக்கப் போகிருேம்??? என்று கேட்டார் அம்மாஞ்சி. முதலில் குளியலே முடியுங்க. மற்றதெல்லாம் அப் புறம்?’ என்ருன் பஞ்சு. - ஒரு மணிக்கு எல்லோரையும் லஞ்ச்சுக்கு அழைத்த போது சாம்பசிவ சாஸ்திரிகளே மட்டும் காணவில்லை. அவர் எங்கே போனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. அம்மாஞ் சிக்கோ பசி தாங்கவில்லே . -

  • சாஸ்திரிகள் எங்கே? எங்கே??’ என்று அலறிக் கொண்டிருந்தார் அம்மாஞ்சி. - * இவ்வளவு பெரிய அரண்மனையிலே அவரை எங்கே போய்த் தேடுவது?’ என்று கவலைப்பட்டார் குள்ள சாஸ்திரி.

'அவர் டயட்லே இருக்காறும், சாப்பிட வரவில்லை என்று சொல்லி விட்டார்?’ என்ருன் பஞ்சு. டயட்லேயோ? அவருக்கென்ன டயட்? உடம்பு இன்னும் இளேக்கனுமாமா?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 6 இல்லே; டயட்னு கவர்ன்மெண்ட் பில்டிங் பேர். பார்லிமெண்ட் கூடுகிற இடம். டோக்கியோவிலேயே முக்கியமான இடம்?’ என்ருன் பஞ்சு. தெ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/26&oldid=924677" இலிருந்து மீள்விக்கப்பட்டது