பக்கம்:தெப்போ-76.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தெப்போ - 75 தள்ளுமோ என்று பயந்துவிட்டேன்’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள், 'மணி நாலு ஆகப் போகிறது. நேரமாச்சு. புறப்பட லாமா??? என்று கேட்டுக்கொண்டே அம்மாஞ்சி தம் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அது நின்று போயிருந். ததால் அம்மாஞ்சியின் முகத்தில் அசடு வழிந்தது. உம்ம வாச்" சை ஏதாவது ஒரு ரயில் தண்டவாளத் தின் மீது கொண்டுபோய் வையும். அப்புறம் நிற்காமல். ஒடும்?’ என்று கேலி செய்தார் ஜப்பான் சாஸ்திரி. 'இன்று செவ்வாய்க்கிழமை. மூணு நாலரை ராகு. காலம். இந்த நேரத்தில் புறப்படலாமா?’ என்று ஒரு. பிரச்னையைக் கிளப்பினர் சாம்பசிவ சாஸ்திரி. 'பரவாயில்லே; நம்ம பூமிக்குதான் ராகுகாலம், எமகண்டம் இதெல்லாம். இது ஜப்பான்’’ என்ருர் குள்ள சாஸ்திரி. பஞ்சு ளாரும் கோபால் ராவும் எங்கே போனங்க? ரொம்ப நேரமாக் கானே மே??’ என்று கேட்டார் அம்மாஞ்சி. .

  • அவங்க இரண்டு பேரும் டயட் பில்டிங் போயிருக் காங்க. அங்கே கல்ச்சுரல் அஃபேர்ஸ் மினிஸ்ட்ரியிலே, இன்று டிஸ்கவடின் நடக்கிறதாம். தேரோட்டம் பற்றி * த்ரெட்பேரா எல்லா விவரங்களையும் டிஸ்கஸ் பண்ணப் போருங்களாம்?’ என்ருர் சாம்பசிவம்.

த்ரெட்பேர் என்ருல் என்ன அர்த்தம்? என்று: கேட்டார் அம்மாஞ்சி, தேர் இழுக்கிற கயிற்றுக்கு த்ரெட்’னு சொல்லு வாங்க. பேர்’னு தேர் இழுக்கிறவங்க எத்தனை பேர் என்று அர்த்தம். அதுதான் த்ரெட்பேர்?’ என்று விளக் 'கினர் சர்ம்பசிவம். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/29&oldid=924680" இலிருந்து மீள்விக்கப்பட்டது