பக்கம்:தெப்போ-76.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எனக்கு ஒரு சந்தேகம்' என்றர் அம்மாஞ்சி. என்ன அது?’ என்று கேட்டார் சாம்பசிவம். 'பெண்ணுக்குத் தானே கெய்ஷான்னு சொல்வது? அப்புறம் எதுக்கு ஆம்பிள்ளே மாதிரி ஷான்னு சொல் லணும்? கெய்ஷின்னே அழைக்கலாமே!’ என்ருர் அம் மாஞ்சி. எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஜப்பான் வந்ததற்கு அடையாளமா இனிமே அம்மாஞ்சியை அம்மாஞ்ஷின்னே அழைக்கலாம்.’’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள். அது சரி; ராத்திரி நன்ருய்த் தூங்கினிரா??? என்று சாம்பசிவ சாஸ்திரியைக் கேட்டார் அம்மாஞ்சி. இல்லை; கட்டில் மேலே படுத்திருந்தேன? துரக்கமே வரவில்லே. பூகம்பம் வருமோன்னு பயமாக இருந்தது. அப் புறம் என்ன செய்தேன் தெரியுமா? துண்டை உதறித் தரையிலே போட்டுக்கொண்டு நிம்மதியாப் படுத்து விட் டேன்?’ என்ருர் சாம்பசிவம். 'காளிதாசன் கட்டிலில் படுத்த கதைதான்! ஏர்கண்டி வடின் ரூமிலே மெத்தென்ற குஷன்” கட்டிலில் சுகமாகப் படுத்துத் தூங்கக் கொடுத்து வைக்கனுமே! உமக்கு அவ் வளவுதான் பிராப்தம்?’ என்று கேலி செய்தார் அம்மாஞ்சி. 'அப்படி ஒண்ணும் இல்லை. எந்த நிமிஷத்திலே பூகம்பம் வருமோ, என்னக் கட்டிலிலிருந்து கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/28&oldid=924679" இலிருந்து மீள்விக்கப்பட்டது