பக்கம்:தெப்போ-76.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ெப்போ - 75 45 ஒரு பொருத்தம் கவனிச்சிங்களா? திருவாரூர்த் தேரின் உயரம் 101 அடி. இங்கே கின்லா வீதியிலுள்ள கட்டடங்களின் உயரம் 102 அடி என்ருர் ஜப்பான் சாஸ்திரி. o தேரோட்டம் என்ருல் நாலு வீதியைச் சுற்ற வேண் டாமா? அப்படின்கு டர்னிங்லே தேரைத் திருப்பணுமே, அதற்கு என்ன வழி?’ என்று கேட்டார் சாம்பசிவம். 'ஜப்பான்லே ரயில் ஓட்டத்தையே எலெக்ட்ரானிக் எமிஸ்டத்திலே கண்ட்ரோல் பண்ருங்க. தேரைத் திருப்பு வதுதான ஒரு பிரமாதம்?’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. - 'அதெல்லாம் கூடாது. நம் ஊர்த் தேரை நம் ஆட் கள்தான் இழுக்கணும், திருப்புவதெல்லாம் கூட நம் ஊர் எமிஸ்டத்தில்தான் திருப்பணும். ஸ்டீல் ஷிட் ரீப்பர், கட்டையெல்லாம் சக்கரத்தின் கீழே வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டால் தேர்ச்சக்கரம் அதில் வழுக்கிக் கொண்டு டர்ன் ஆகும். அப்போது, அடாடா, தேர் கம்பீரமாகத் திரும்புகிற காட்சி அற்புத மாயிருக்கும். அதுதான் இந்த விழாவுக்கே க்ளேமாக்ஸ்’’ என்ருர் அம்மாஞ்சி. * - - - 'அப்படின்ன முட்டுக்கட்டைகளோடு ரீப்பர் கட்டை, ஸ்டீல் வrட், விளக்கெண்ணெய் இதெல்லாம் ஞாபகமாகத் தமிழ் நாட்டிலேருந்து கொண்டுவரனும்: என்ருர் சாம்ப சிவம். - 'அது மாத்திரம் இல்லே. அங்கங்கே சக்கரங்களின் கீழே கட்டைகளைப் போட்டு"தேரை நகர்த்த வேண்டியிருக் கும்.அத்ற்காக லாரி லாரியா துரங்குமூஞ்சி மரக்கட்டைகள், இலுப்பைக் கட்டைகள் கூட வரணும்' என்ருர் அம்மாஞ்சி, கட்டைகளெல்லாம்கூட அக்பர் ச்க்கரவர்த்தியிலே பயணமா? கேவலம் இந்தக் கட்ட்ைகளுக்கு வந்த யோகத் தைப் பாருங்கள். ஜம்போஜெட்லே பயணம்1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/46&oldid=924699" இலிருந்து மீள்விக்கப்பட்டது