பக்கம்:தெப்போ-76.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 4፮

  • விளக்கெண்ணெயைக் கொட்டினுல் கின்ஸா வீதி யெல்லாம் பாழாயிடுமே!’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • அது மட்டுமா? தேர் இழுக்க வருகிறவர்களில் பாதிப் பேர் வெற்றிலே பாக்குப் போடுகிறவர்களாயிருப்பரங்க. அவங்க வேறே ரோடெல்லாம் துப்பிடுவாங்களே, அதை நினைக்கிறபோதுதான் கஷ்டமாயிருக்கு என்ருர் சர்ம்ப் சிவம். . . . . .

வெற்றிலே போடுகிறவர்கள் தரையைக் கெடுப் பாங்க. பொடி போடுகிறவர்கள் காற்றைக் கெடுப்பர்ங்க, உம்...ஜப்பான் சுத்தமான தேசம்...' என்று இழுத்தாற் போல் கூறி, குள்ள சாஸ்திரியை ஒர்க் கண்ணுல் பார்த் தார் அம்மாஞ்சி. - - ஆமாம், இவ்வளவு பேரையும் எங்கே தங்க வைப் பது?’’ என்று ஒரு கேள்வியைப் போட்டார். சாம்பசிவம். 'ஒட்டல் ஒகூரா, ஒட்ட்ல் ட்ய்ச்சி, ஓட்டல் டோக் கியோ இப்படி எல்லா ஒட்டலிலும் போட வேண்டியது தான். சக்கரவர்த்தியே இதில் ரொம்ப ஆர்வமா யிருக்கிற போது இதெல்லாம் ஒரு பிரச்னையா? ஜப்பானில் தடுக்கி விழுந்தால் ஓட்டல். முதல்லே. தெப்பம் விடறது.எங்கே? அது தீர்மானம் ஆக வேண்டாமா?’ என்று கேட்டார். சாம்பசிவம்.

  • நாளேக்கே நாம் மூன்று பேரும் ரயிலில் போய் ஃப்யூஜி மெளண்டன் பக்கத்திலே உள்ள ஹகோனே ஏரி யைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.’’ என்ருர் அம்மாஞ்சி. * முதலில் ஸூப்பர் எக்ஸ்பிரஸில் ஏறி க்யோடாவுக்குப் போய்ப் பார்ப்போம். ஜப்பானின் மிகப் பழமையான நகரம் அது. ஊர் ரொம்ப அழகாக இருக்குமாம்.’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - -

ஸ்பிப்பர் எக்ஸ்பிரஸ்லே பயணம் செய்வதே ஒரு தனி அனுபவமாம். மணிக்கு 125 மைல் வேகம் போகு மாம்?’ என்ருர் சாம்பசிவம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/48&oldid=924701" இலிருந்து மீள்விக்கப்பட்டது