பக்கம்:தெப்போ-76.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அமெரிக்கா போகாமலேயே, வாஷிங்: டன் நகரைப் பார்க்காமலேயே வாஷிங்டனில் திரு மணம் எழுதினேன். ஆனல் தெப்போ-76-ஐ அப்படி எழுதவில்லே. ஜப்பான் நாட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகே எழுதியுள் ளேன். தேர் விடப்பட்ட கின்ஸ்ா வீதிகள், தெப் பம் விடப்பட்ட ஹ கோனே ஏரி, இம்பீரியல் பாலெஸ், கியோட்டோ, ஒஸாகா, நாரா ஆகிய எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரியும். போதாக் குறைக்கு இந்த இடங்களைப் பற்றிய பல புத்தகங்களேயும் வரைபடங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். சென்னே நகரில் எனக்குப் பல இடங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனல் ஜப்பானில், அதுவும் டோக்கியோவில் உள்ள சந்து பொந்துக ளெல்லாம் எனக்குத் தெரியும். தேர் விடுவது அத்தனை சுலபமல்ல, அதற்கு அனுபவமும் ஆற்றலும் வசதியும் இருக்க வேண்டும். அதற்குத் தகுதியானவர் யார் என்று யோசித்து திருவாரூர் வி. எஸ். டி. அவர்களேத் தேர்ந்தெடுத்து முக்கியப் பொறுப்புக்களே அவரி டம் ஒப்படைத்தேன். அவரும் மனப்பூர்வமாக அதற்கு ஒப்புக் கொண்டார். தெப்போ திருவிழா வைச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததோடு இந்: தப் புத்தகத்திற்கு அருமையான முன்னுரை ஒன் றும் எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/5&oldid=924703" இலிருந்து மீள்விக்கப்பட்டது