பக்கம்:தெப்போ-76.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க விழாவுக்குக் கலைஞர் அவர் களே அழைத்துச் சென்றேன். மிகச் சிறப்பான தொரு சொற்பொழிவு நிகழ்த் தி, இந்த நகைச் சுவை நவீனத்துக்கேற்ற வகையில் நகைச்சுவை யான முறையில் பேசி விழாவைத் தொடங்கி வைத்தார். வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுக, மான அம்மாஞ்சி , சாம்பசிவ சாஸ்திரி, கோபால் ராவ், பஞ்சு இவர்கள் நால்வருடன், புதிய கா ரெக்டராக ஜப்பான் சாஸ்திரியையும் உருவாக்கினேன். இவர்களுடைய நகைச்சுவை உரை யாடல்கள் தேரோட்டத்தின் சிரமம் தெரியாமல் பார்த்துக் கொண்டன. கதை எழுதிவிட்டால் மட்டும் போதுமா? அதைப் பரிமளிக்கச் செய்வது சித்திரங்கள் அல்லவா? வாரா வாரம் கோபுலு வரைந்து. கொடுத்த அற்புதமான சித்திரங்கள் இந்தக். கதைக்கு உயிர்த் துடிப்பைத் தந்தன. அவர் வரைந்த தேர்ச் சக்கரங்களும், வெடிப் புகையும், தொம்பைகளும் இன்னும் கண்முன் நிற்கின்றன. அவருக்கு என் நன்றி. மிக அழகிய முறையில் இப்புத்தகத்தை. வெளியிட்டுள்ள பூம்புகார் பிரசுரம் திரு. பரதன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களே யும் நன்றியை: யும தெரிவித்துக் கொள்கிறேன். - -சாவி: அண்ணநகர், சென்னே-40. 8–9–76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/6&oldid=924714" இலிருந்து மீள்விக்கப்பட்டது