பக்கம்:தெப்போ-76.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை "தெப்போ-76: என்ற கற்பனைச் சித்திரத்தை தின :மணி கதிரில் படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளைப் பற்றி நன்கு அறிவார்கள். இந்த அருமையான கற்பனைச் சித்திரத்தைத் தமிழ் மக்களுக்குத் தீட்டித் தந்தவர் நம் பாரத நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரான திரு சாவி? அவர்கள். தமிழர்களின் அறிவுை வளர்க்கும் வகையில் அவர் நகைச்சுவை ததும்பும் பல கட்டுரைகளே எழுதி, பெரும்சேவை செய்து வருவது பற்றியும் அவரது எழுத் துத் திறமை பற்றியும் அறியாத தமிழர் யாரும் இருக்க முடியாது. வாஷிங்டனில் திருமணம் என்ற பிரமாதமான நகைச்சுவைத் தொடர் கதையை எழுதி எத்தனையோ லட்சம் தமிழர்களே அவர் மகிழ்வித்தார். அதே மாதிரி " தெப்போ-76’ என்ற நகைச்சுவைத் தொடர்கதையை நம் மக்களுக்கு ‘சாவி’ அவர்கள் சமீபத்தில் அளித் துள்ளார். தமிழ்நாட்டின் மிகப் புராதனமான திருவாரூர் ஆரீ தியாகராஜ சுவாமியின் பெரிய தேர் உற்சவத்தையும், அங்கு கமலாலயத்தில் நடைபெறும் தெப்ப உத்சவத்தை யும், அவைகளின் சிறப்புக்களையும், அவர் மனதில் கொண்டு, இந்த உற்சவங்களே ஜப்பானில் நடத்தில்ை எப்படி இருக்கும் என்ற கற்பனேயுடன் இக்கதையை உரு வாக்கியுள்ளார். இந்தக் கதையை எழுத எண்ணியவுடன், சாவி’ அவர்கள் இவ்வாண்டு திருவாரூருக்கு வந்திருந்து, இந்த இரண்டு உற்சவங்களையும் நேரில் கண்டு களித்தார். முக்கியமாக, பெரிய தேர் ஓட்டத்தின் சிறந்த அம்சங்களே :யும், தேர் கோடி திரும்பும் காட்சியையும், பல்லாயிரக் கணக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொள்ளும் பாங்கினையும், தெப்போற்சவத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/7&oldid=924725" இலிருந்து மீள்விக்கப்பட்டது