பக்கம்:தெப்போ-76.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சிறப்புக்களையும், அப்பொழுது தெப்பத்தில் நடைபெறும். சங்கீதக் கச்சேரிகளையும் நேரில் கண்டு வந்தார். இந்த மாபெரும் அழகிய நிகழ்ச்சிகளே அவர் தமது கற்பனைச் சித்திரத்தின் மூலம் ஜப்பானிலே நடத்திக். காட்டி விட்டார். இக் கதையில் எத்தனையோ நகைச் சுவை மிகுந்த விஷயங்களே ஜப்பான் சாஸ்திரிகள் மூலமாக வும், சாம்பசிவ சாஸ்திரிகள் மூலமாகவும் வாசகர்களுக்கு. வழங்கியுள்ளார் சாவி. நமது தமிழகத்தின் நுண்கலேகள்,. பண்பாடுகள், வாழ்க்கை முறைகள், கோவில் விழாக் களின் சிறப்புகள், பல்கலை விற்பன்னர்களின் பணிகள் முதலியவற்றை இக்கதையின் மூலம் எல்லோரும் அறிய ஒரு பெரும் வாய்ப்பை அளித்துள்ளார். இது போல ஜப் பான் நாட்டைப் பார்க்காதவர்கள் தெளிவாகப் புரிந்து. கொள்ளும் வகையில் அந்த நாட்டின் சிறப்புகளைப் பற்றி யும், இயற்கை வளம், செயற்கை வளங்களேப் பற்றியும், அந்நாட்டுச் சக்கரவர்த்தி முதல் மற்ற எல்லா மக்களுடைய பண்பாடு, வாழ்க்கை முறைகள், அவர்களது புத்த கோவி லின் அமைப்பு ஆகியவை பற்றியும், அவர்களிடமிருந்து நம் நாட்டினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியக் கருத் துக்கள் பற்றியும் வெகுவிரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நான் பத்தாண்டுகளுக்கு முன் ஜப்பான் சென்ற பொழுது கண்ட இயற்கை வளங்களும், மக்களின் உழைப் பும் சுறுசுறுப்பும், அவர்களது பண்பாடுகளும், விவசாயத் தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள் முன்னேற்றமும், நகரத் தோற்றங்களும், தெப்போ-76 ஐப் படித்தபோது மறுபடி யும் ஜப்பானுக்கே சென்று அவற்றை நேரில் காண்பது போல் எனக்குத் தோன்றியது. அவ்வளவு அழகாகவும், தெளிவாகவும் சாவி அவர்கள் அந்நாட்டின் மேன்மையை நம் மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். தேர் இழுக்க கின்சர் பகுதியையும் தெப்பத்திற்கு. ஹகோனே ஏரியையும் அவர் தேர்ந்தெடுத்ததே மிகப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/8&oldid=924736" இலிருந்து மீள்விக்கப்பட்டது