பக்கம்:தெப்போ-76.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தெப்போ.-78 தாழ்ப்பாளில் ஏதோ கோளாறு போலிருக்கு. ஜாமாகி விட்டிருக்கிறது?’ என்ருர் சாம்பசிவம். 'ஆபத்து சமயத்திலே அடிப்பதற்கென உள்ளே அலாரம் மணி இருக்கிறதே, அதை அடித்திருக்கலாமே...?? என்ருர் ஒரு ஜப்பானியர். அது எனக்குத் தெரியவில்லே’’ என்ருர் சாம்பசிவம். 'பரவாயில்லே; இப்படி ஒரு அசெளகரியத்தை ஏற். படுத்தியதற்காக வருந்துகிருேம்?’ என்று கூறி மன்னிப்பு கேட்டார் ஒரு ரயில்வே அதிகாரி. 'என் அறியாமைக்கு நீங்கள் வருத்தப்படுவா னேன்? - என்ருர் சாம்பசிவம். 'இரண்டு மணி நேரம் டாய்லெட்டிலேயே பயணம் செய்திருக்கிறீர்கள். அது அசெளகரியம்தானே? ஆகை யால் நாங்கள் உங்களிடம் சார்ஜ் வாங்க மாட்டோம். தங்கள் டிக்கட் பணத்தை வாபஸ் தந்து விடுகிருேம்: என்று கூறி ஆயிரத்து முன்னுாறு யென்களே சாஸ்திரி களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். 'அடாடா! என்ன தேசம், என்ன தேசம் நம் ஊரில் இம்மாதிரி நடந்திருந்தால் உடனே 'டிக்கெட்லெஸ் ட்ராவல்’னு சந்தேகப்பட்டு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளியிருப்பான்’’ என்ருர் சாம்பசிவம். இன்று நீங்க நரிமுகத்தில் விழித்திருக்க வேண்டும். கோபால் ராவுக்கு முத்துமாலே. உமக்கு டிக்கட் பணம் வாபஸ்?’ என்ருர் அம்மாஞ்சி, நானும் உம்முடைய முகத்தில் தான் விழித்தேன்! ?? என்ருர் சாம்பசிவம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/59&oldid=924713" இலிருந்து மீள்விக்கப்பட்டது