பக்கம்:தெப்போ-76.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£3 கோபால் ராவையும் பஞ்சுவையும் டீக்கு அழைத் திருந்தார் சக்கரவர்த்தி ஹிரோஹிடோ. கோபால் ராவைப் பார்த்ததும் புன்சிரிப்போடு, காலேயில் கொடுத்த ப்ளான்ட்ஸ் எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல். தோமொ, தோமொ’’ என்ருர் சக்கரவர்த்தி. கோபால் ராவுக்கு உச்சி குளிர்ந்து போயிற்று. திருவாரூர் தேர்ப் படத்தையும் கின்ஸாவில் தேர் ஒடப் போகிற வீதிகளின் வரைபடத்தையும் சக்கரவர்த்தி யிடம் எடுத்துக் காட்டின்ை பஞ்சு. அந்தத் தேரைக் கண்டுவிட்டு, "பியூத்திபுல்! ஒண்டர்புல்’’ என்று வியந்து பாராட்டினர் சக்கர வர்த்தியும் மகாராணியும். பாலெஸிலிருந்து தேரைக் கின் ஸாவுக்கு எப்படிக் கொண்டு போவது?’ என் ருெரு பிரச்னையைக் கிளப் பினுன் பஞ்சு. ஏன், அதிலே என்ன கஷ்டம்??’ என்று கேட்டார் சக்கர வர்த்தி. குறுக்கே நிறைய ரயில்வே பிரிட்ஜுகள் இருக் கின்றன. பிரிட்ஜுகளுக்கு அடியில் தேரைக் கொண்டு போக முடியாமல் மேலே தடுக்கும் போலிருக்கிறதே?? என்ருன் பஞ்சு. டோண்ட் ஒர்ரி. யூ. கன்ஸ்ல்ட் அவர் என்ஜினிர்ஸ். தே வில் ஸால்வ் தி ப்ராப்ளம் இன் நோ டைம்' என்ருஜர் சக்கரவர்த்தி. ‘. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/60&oldid=924715" இலிருந்து மீள்விக்கப்பட்டது