பக்கம்:தெப்போ-76.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தெப்போ 76 மூவரும் அந்த ஒட்டலில் போய்த் தங்கினர்கள். ஜப்பான் சாஸ்திரி ஒட்டல் பணிப்பெண் ஒருத்தியை அழைத்து, அவளிடம் எப்படியோ பேசி ஒரு கெட்டில் நிறைய கொதிக்கும் வெந்நீர் கேட்டு வாங்கி வந்து விட் டார். அம்மாஞ்சி அதில் தயாரித்த நெஸ் காப்பியை மூவரும் அருந்தி சிரம பரிகாரம் செய்து கொண்டனர். என்ன இருந்தாலும் நம்ம அம்மாஞ்சி தயாரிக்கிற காப்பிக்கு உள்ள மணமே அலாதி!' என்ருர் சாம்பசிவ சாஸ்திரி. அம்மாஞ்சி போடுகிற காப்பி அமிஞ்சியாப் போகுமா?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. o:

  • இன்று ஏகாதசியாச்சே, ராத்திரி என்ன பல காரம்??? என்று கேட்டார் சாம்பசிவம்.

நான் அவல் கொண்டு வந்திருக்கிறேன். அதைத் தயிரில் ஊறப்போட்டுச் சாப்பிட்டால் தேவாமிருதமாயிருக் கும்.’’ என்ருர் அம்மாஞ்சி. - . நீர் ஏற்கனவே தேவாமிருதம் ருசி பார்த்திருக் கிறீரா?? என்று. அம்மாஞ்சியைச் சமயம் பார்த்து மடக் கிளுர் ஜப்பான் சாஸ்திரி. ஹரிஹி நீர் சரித்திர காலத்தில் ஜப்பானுக்கு வந்த மாதிரி தான் நான் தேவாமிருதம் ருசி பார்த்ததும்! என்று சொல்லிச் சிரித்தார் அம்மாஞ்சி. அப்படி வாங்க வழிக்கு!’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - - - . எநாளைக் காலையில் நாராவுக்குப் போய் புத்தர் கோயி ஆலப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். உலகத்திலேயே மிகப் பெரிய புத்தர் சிலே அங்குதான் இருக்கிறதாம்: என்ருர் சாம்பசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/65&oldid=924720" இலிருந்து மீள்விக்கப்பட்டது