பக்கம்:தெப்போ-76.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தெப்போ - 76 மூவரும் எட்டாவது மாடிக்குப்போய் ஹி காஷ்யாமா ? என்ற க்ரில் ரூமுக்குள் நுழைந்து கண்ணுடிச் சுவர் ஒரமாக உட்கார்ந்து கொண்டார்கள். தற்செயலாய்க் கீழே வீதியை எட்டிப் பார்த்த. ஜப்பான் சாஸ்திரி, அதோ என் மருமான் ரமேஷ், ரமேஷ்!?’ என்று கத்திக் கொண்டு எழுந்து நின்ருர், 'ஏன் இப்படிக் காட்டுத்தனமா கத்தறிங்க? இது. இண்டியா இல்லே. மெதுவாகப் பேசும். இங்கே யாராவது உரக்கப் பேசுகிருர்களா, பார்த்தீரா??’ என்று அடக்கினர் அம்மாஞ்சி. -

  • அவர்களுக்கு இப்படி திடீரென்று மருமான் வரவில் இலயே! என்று கூறிய ஜப்பான் சாஸ்திரி ரமேஷைப் பார்க். கக் கீழே இறங்கி ஓடினர்.

ஜப்பான் சாஸ்திரியைக் கண்டதும் நீங்க எப்ப வந்தீங்க மாமா, ஜப்பானுக்கு?’’ என்று வியப்பு மலரக் கேட்டான் ரமேஷ்.

  • நீ டோக்கியோவிலிருந்து எப்போது வந்தாய்? அதைச் சொல்லு முதலில்’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

'நண்பர்களோடு எக்ஸ்கர்ஷன் வந்திருக்கிறேன் மாமா நாலாவது மாடியில் தங்கியிருக்கிருேம். இப்போது தான் வந்தோம்’ என்ருன் ரமேஷ். ரொம்ப விஷயங்கள் பேச வேண்டும் உன்ளுேடு. வா, மேலே போய் உட்கார்ந்து பேசலாம்?? என்று அவனே க்ரில் ரூமுக்கு அழைத்துச் சென்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'நீங்க வந்திருக்கிற விஷயம் எனக்குத் தெரியும். தெப்போ-லெவெண்ட்டிஸிக்ஸ் தானே? என்னைக்கூட தெப்போ-76 சம்பந்தமா டயட் ஆபீஸுக்கு போஸ்ட்” பண்ணியிருக்கிருர்கள். அடுத்த வாரத்திலிருந்து எனக்கு. அங்குதான் வேலே’ என்ருன் ரமேஷ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/67&oldid=924722" இலிருந்து மீள்விக்கப்பட்டது