பக்கம்:தெப்போ-76.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 692 விடுவீர். இனிமேல் தேர் மாதிரி உமக்கும் ஒரு வடத்தைக் கட்டி இழுத்துப் போக வேண்டியதுதான்’’ என்ருர் அம்மாஞ்சி. - தேர் செய்வதற்கு வேண்டிய மரம் ஜப்பானிலேயே. கிடைக்கும் போலிருக்கிறதே?? என்ருர் சாம்பசிவம். தெப்பம் விடுவதற்கு மூங்கிலுக்குப் பஞ்சமில்லே 2: என்ருர் ஜப்பான் சாஸ்திரி. s' மாலே மணி மூன்றுக்குள்ளாகவே எல்லோரும். க்யோட்டாவுக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ரமேஷ்! இன்று மாலேயே டீ ஸெரிமனி பார்க் கணும் 12 என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'இங்கே யஸாகா ஹால் என்று ஒரு இடம் உள்ளது. ஜப்பான் நாட்டுக் கலாசாரங்கள் அவ்வளவையும் அங்கே பார்த்து விடலாம். டீ. ஸெரிமனி கூட அங்கே உண்டு. வாருங்கள், அங்கே உங்களை அழைத்துப் போ கிறேன். நான் உள்ளே வரமாட்டேன். ஏற்கனவே நான் டி ளெலரி மனி பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கு அது ரொம்ப, போர் அடிக்கும்’ என்ருன் ரமேஷ். மூவருக்கும் ஜப்பானிய உடைகள் வாங்கிக் கொடுத்து டீ ஸ்ெரிமனி இடக்குமிடத்துக்கு அழைத்துச் சென்ருன் ரமேஷ். மூவரும் செருப்பைக் கழற்றி வாசலி லேயே விட்டு விட்டு உள்ளே போய் உட்கார்ந்தார்கள். இவர்களேக் கண்டதும் அங்குள்ள ஜப்பானியப் பெண்கள் இடுப்போடு உடலே வளைத்து வணக்கம் தெரிவித்தார்கள். அங்கே மேஜை நாற்காலிகள் இல்லை. தரையில் பாய் விரிக் கப்பட்டிருந்தது. மூவரும் ஜப்பானிய முறைப்படி மண்டி. யிட்டு உட்கார்ந்து கொண்டார்கள். அப்படி உட்காருவது அவர்களுக்குக் கஷ்டமாயில்லே. மூங்கில் குழாய்களில், ஒருத்தி எதையோ ஊற்றிக் கொண்டிருந்தாள். இன்னெ. ருத்தி கலையழகு மிக்க பளபளக்கும் பீங்கான் கோப்பைகளே நளின்மாகத் துடைத்துக் கொண்டிருந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/70&oldid=924726" இலிருந்து மீள்விக்கப்பட்டது