பக்கம்:தெப்போ-76.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 டீ ஸெரிமனி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. - போர், சரியான போர்! இது நிஜமாகவே சிராத்தம் தான், ரொம்பப் பொறுமை வேண்டும் இதற்கு?’ என்று அலுத்துக் கொண்டார் அம்மாஞ்சி. .. வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் பெற்ற ஜப் பான்காரர்கள் இந்த டீ ஸெரிமனி விஷயத்தில் இப்படி ஆமையாக இருக்க வேண்டாம்?’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள். - - போர் அடிப்பதுதான் இந்த டீ ஸெரிமனியின் தனிச் சிறப்பு. சாவகாசமாக உட்கார்ந்து அவசரத்தை யெல்லாம் மறந்து அமைதியாக தியானம் செய்வது போன்ற ஒரு .கஜல இது என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'பச்சையா ஒரு டீ பவுடரை எடுத்து வெந்நீரில் போட்டுக் கலக்கிச் சாப்பிடுவதற்கு இத்தனே நிதானமா? டியாவது நன்ருயிருக்கிறதா என் ருல் அதுவுமில்லே?" என்ருர் அம்மாஞ்சி. - அந்த டீக் கோப்பைகளே எத்தனை நேரம்தான் அழகு பார்ப்பது? இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கும் அந்தக் கையிலிருந்து இந்தக் கைக்கும் எத்தனை தடவை மாற்று வது?. இப்படி ஒரு கலேயா? மடமடன்னு குடிக்கக் கூடா தாம்! உரக்க பேசக் கூடாதாம்! கொஞ்சம் கொஞ்சமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/71&oldid=924727" இலிருந்து மீள்விக்கப்பட்டது