பக்கம்:தெப்போ-76.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?8 . தெப்போ - 6 விடணும். அந்தத் தெப்பத்திலே, நாமகிரிப்பேட்டை, ஏ. கே. ஸ்மி., லால்குடி, குன்ன்க்குடி , சிட்டிபாபு, மதுர்ை சோமு, எம். எல். வி. இவர்களெல்லாம் கச்சேரி செய்ய ணும். இந்தக் காற்றுக்கும் கச்சேரிக்கும் எப்படி இருக் கும்?’ என்று கூறி மானசீகமாக ரசித்துப் பார்த்தார் சாம்பசிவ சாஸ்திரி. குன்னக்குடின்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ ருக்குப் பக்க வாத்தியம் யாரு?’’ என்று கேட்டார் அம்மாஞ்சி. வலேயப்பட்டிதான். நாமகிரிப் பேட்டை, குன்னக் குடி இரண்டு பேருக்குமே அவர்தான்’ என்ருர் கோபால் ராவ். ஒரு கல்லில் ரெண்டு மாங்காயா!' என்றர் அம்மாஞ்சி. י • நாமகிரிப்பேட்டை தோடி வாசிச்சார்ளு இந்த ஏரியே ரொம்பிப் போயிடும்?' என்ருர் சாம்பசிவம். குன்னக்குடியை சீக்கிரமே புறப்பட்டு வரச் சொன் ல்ை தேவலே’’ என் ருர் அம்மாஞ்சி. 6 ஏன்? என்ன சமாச்சாரம்??? என்று கேட்டார் சாம்ப சிவம். . அவர்தான் பட்டை பட்டையா நெற்றி பூராவையும் அடைச்சு விபூதி பூசுவார். அவர் வந்தால் நமக்கு விபூதிப் பஞ்சம் தீரும். கொண்டு வந்த ஸ்டாக்கெல்லாம் தீர்ந்து போச்சு என்ருர் அம்மாஞ்சி. - - * இந்த ஏரியையும் சூழ்நிலை யையும் பார்க்கிறப்போ, தெப்ப உற்சவத்தன்று இங்கே வரவங்க எல்லாருக்கும் ஒரு வெண் பொங்கல், புளியோதரை, மசால்வடை, தயிர் சாதம் அவ்வளவையும் தனித் தனியா பொட்டலம் பொட் .டலமாகக் கட்டிக் கொடுத்து விட்டால் அவங்கவங்க, கும்பல் கும்பலா ஏரியைச் சுற்றி புல்தரையிலே உட்கார்ந்து ஆனந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/79&oldid=924735" இலிருந்து மீள்விக்கப்பட்டது