பக்கம்:தெப்போ-76.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 89.

  • அன்றைக்குக் கின்ஸ்ாவிலே நான் காணுமல்போயிட் டேன் இல்லேயா? அப்போ ஒரு தெரு முனேயிலே உள்ள சுவர் லே என் பெயரை பால்பாயிண்ட் பென்சிலால் அழுத் தமா எழுதி வைத்து விட்டேன். கின் ஸாவிலே எல்லாத் தெருவும் ஒரே ஜாடையா இருக்கு. ஒரு முறை போன தெருவிலேயே திரும்பத் திரும்ப அலேயக் கூடாது என்பதற் காக என் பெயரை எழுதி வைத்து விட்டேன்?’ என்ருர் சாம்பசிவம்.

உமக்கு ஏன் இப்படி ஒரு அற்ப ஆசை? சின்னப் பிள்ளேத்தனமா இருக்கே!' என்ருர் அம்மாஞ்சி. எனக்கு அந்த வீதி முனேயிலே ஒரு சிலேயே வைக்க லாம். அவ்வளவு அலே அலேந்திருக்கிறேன்?’ என்ருர் சாம்பசிவம்.

  • நீரா அலேந் தீர்? உம்மைத் தேடி நாங்கள் அல்லவா அலேந்தோம்??? என்ருர் அம்மாஞ்சி.

சரி, வீதிகளுக்குப் பேர் வெச்சுட்டா மட்டும் போதுமா? தேரின் நாலு பக்கத்திலும் நாலு குறள்களே எழுதி வைக்க வேண்டாமா?’ என்று கேட்டார் கோபால் ராவ். நாலு குறள் என்ருல் என்னென்ன குறள்? அவற்றை யார் தேர்ந்தெடுப்பது.??? என்று கேட்டார் கோபால் ராவ். தேரில் குறள் எழுதி வைக்கிற ஐடியா ஒண்னும் புதுசில்லே. நம் ஊர் பஸ்களில் எழுதி வைத்திருக்கிற மாதிரி தானே??’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'எனக்கு ஒரே ஒரு குறள் தெரியும். 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்கிற குறள் என்ருர் அம்மாஞ்சி. உமக்கென்ன? ரொம்பப் பேருக்கு அது ஒண்ணு தான் தெரியும். ஆணுல் அவங்க எல்லாக் குறளும் தெரிஞ்ச மாதிரி நடிப்பாங்க... என்ருர் சாம்பசிவம். தெ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/90&oldid=924748" இலிருந்து மீள்விக்கப்பட்டது