பக்கம்:தேன்மழை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 அகலிகை புனலாடு தாமரை போன்ற மங்கையர் ஆரிய நங்கையின் அழகினை வென்றிட முடியாமற் போனதால் முக்காடிட் டனராம்! உறுப்புநூல் வல்லார் குறிப்பிடும் எழிலின் சிறப்பெலாம் ஒன்று சேர்ந்து திரண்டு வையமே வியக்கும் வண்ணம் விளங்கினாள் ஆணிப்பொன் மேனி அகல்யா தேவி! துணுக்கம் நிறைந்த நூல்பல கற்றிடின் அகிலமே வியக்கும் அறிஞ னாகலாம் கல்வி செழித்தால் கவிஞ னாகலாம் நாவின் பயிற்சியால் [5Tu6ು 677567) கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டினால் கற்றார் மதிக்கும் கலைஞ னாகலாம்! முற்றி முதிர்ந்த முயற்சியின் மூலம் அனைத்தையும் பெறலாம். ஆயினும் புவியிற் பெறவிய லாதது பேரெழி லாகும்! பிறரிட மிருந்துநாம் பெறமுடி யாததும் உலகத்து மாந்தருள் ஒருசிலர்க் கமைவதும் ஆசை தருவதும் அழகே யாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/110&oldid=926691" இலிருந்து மீள்விக்கப்பட்டது